dina palan
dina palan

16-11-2022

புதன்கிழமை

மேஷம்

இன்று எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பது தாமதமாகும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பதும் நல்லது. பணவரத்து எதிர்பார்த்த நேரத்தை விட தாமதமாக வந்து சேரும். ஆனால் பூர்வீக சொத்துக்களில் இருந்து பிரச்சனைகள் தீரும்.

அசுபதி: இன்று பொதுக் காரியத்தில் உள்ளவர்கள் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள்.
பரணி: குடும்பத்தில் இருந்துவந்த சண்டை நீங்கி தம்பதியர் ஒன்று சேர்வார்கள்.
கிருத்திகை 1ம் பாதம்: ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்:  4, 6

ரிஷபம்

இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் ஏற்பட்டு பின்னர் விலகும். வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளை கையாளும் போது கவனம் தேவை. பாக்கிகள் வசூலாவது தாமதமாகும். உத்யோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக தங்களது வேலைகளை செய்வது நல்லது.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: நினைத்தபடி பணவரவுகளைப் பெறலாம்.
ரோஹிணி:தொழிலதிபர்கள் அதிக உற்பத்தியையும் லாபத்தையும் பெறுவார்கள்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

மிதுனம்

இன்று கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதன்மூலம் அமைதி ஏற்படும்.  விருந்தினர்கள் வருகை இருக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் கோபத்தை காண்பிக்காமல் பேசுவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகலாம். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: வியாபாரிகள் மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம்.
திருவாதிரை: கவனமாகச் செயல்பட்டால் லாபம் பெறலாம்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: இதுவரை குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த பிள்ளைகள் வந்துசேர்வார்கள்.

 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

கடகம்

இன்று எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும். கவனமாக வேலைகளை செய்வது நல்லது. பணவரத்து தாமதமாகலாம்.  மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். சகமாணவர், நண்பர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

புனர்பூசம் 4ம் பாதம்: அயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும்.
பூசம்: தந்தை மகன் உறவு சுமுகமாகும்.
ஆயில்யம்: வீண் அலைச்சல் காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

சிம்மம்

இன்று வீண் செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம். காரியங்கள் முடிவதில் தாமதபோக்கு காணப்படும். தேவையற்ற மன சஞ்சலம் உண்டாகலாம். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்து செல்வது நன்மைதரும்.

மகம்: கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும்.
பூரம்:எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.
உத்திரம் 1ம் பாதம்: அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கன்னி

இன்று கெட்ட கனவுகள் தோன்றலாம். வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு நீங்கும். தொழில் வியாபாரம் மெத்தனமாக காணப்பட்டாலும் பணவரவு இருக்கும். புதிய வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி வியாபாரம் செய்வது நல்லது. போட்டிகளை கண்டு கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும்.
ஹஸ்தம்: தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும்.
சித்திரை 1, 2 பாதங்கள்: வாக்கு வன்மையால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள்

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

துலாம்

இன்று உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.  கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம்.

சித்திரை 3, 4ம் பாதங்கள்: தடைபட்ட ஆர்டர்கள் வந்து சேரும்

ஸ்வாதி: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி புதிய பொறுப்புகள் ஏற்படலாம்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

விருச்சிகம்

இன்று யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம் கவனம் தேவை. மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. பாடங்களை படிப்பதில் கூடுதல் கவனமும், ஆசிரியர்களிடத்தில் பேசும்போது நிதானமும் தேவை.

விசாகம் 4ம் பாதம்: பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும்.
அனுஷம்: சகோதரர்களி டம் கவனமாக பேசுவது நல்லது.
கேட்டை: சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

தனுசு

இன்று எதிலும் சாதகமான நிலை காணப்படும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவிசாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும்.

மூலம்: மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.
பூராடம்: அவர்கள் மூலம் கல்வியில் முன்னேற்றம் காண உதவி கிடைக்கும்.
உத்திராடம் 1ம் பாதம்: எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

மகரம்

இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம், தொழில் தொடர்பான கடிதபோக்கு சாதகமான பலன் தரும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: பணம் சம்பாதிக்கும்  திறமை அதிகப்படும்.
திருஓணம்: தடை பட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

கும்பம்

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். கவுரவம் கூடும். நிலுவை தொகை வந்து சேரும். பதவி உயர்வு கிடைக்கலாம். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
சதயம் 4ம் பாதம்: தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: பழைய பாக்கிகள் வசூலாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மீனம்

இன்று வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். தொலை தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். எதிர்பார்த்த பணம் வரும் வாய்ப்பு உள்ளது.

பூரட்டாதி 4ம் பாதம்: பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும்.
உத்திரட்டாதி: திடீர் என்று பழைய நண்பர்களை சந்திப்பீர்கள்.

ரேவதி: நியாயமாக சிந்தித்து செயல் படுவீர்கள்

 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com