dina palan
dina palan

24-11-2022

வியாழக்கிழமை

மேஷம்

இன்று வேலையில் மாற்றம் உண்டாகலாம். மருத்துவ செலவு உண்டாகலாம்.  தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து  தாமதப்படலாம்.

அசுபதி:இன்று எந்த வேலையிலும் உங்கள் தனித்தன்மை வெளிப்படும்.

பரணி:தடைகளை முறியடித்து காரிய வெற்றி பெறலாம்.

கிருத்திகை 1ம் பாதம்:வீடு நிலம் ஆகியவற்றில் இருந்து வந்த சுணக்க நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்படும்.

 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

ரிஷபம்

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்:சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் சில பாதிப்புகள் வரலாம்.

ரோஹிணி: தந்தை தந்தை வழி உறவினர்கள் பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரலாம்.

மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்:நண்பர்களிடத்தில் மனக்கிலேசம் ஏற்படலாம்.

 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மிதுனம்

இன்று தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். எச்சரிக்கையாக பேசுவது நல்லது. எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். சந்திரன் சஞ்சாரத்தால் காரிய தடை ஏற்படலாம். மனதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: சுபச்செலவுகள் நிகழும்.

திருவாதிரை:எதிர்காலத்திற்குத் தேவையான முறையான சேமிப்புகளுக்குண்டான ஏற்பாடுகளை செய்வீர்கள்.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: எதிரிகளின் இன்னல்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகும்.

 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கடகம்

இன்று ராசியாதிபதி சஞ்சாரத்தால் சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும். வீண் பிரச்சனைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணங் கள் கைகூடும்.

புனர்பூசம் 4ம் பாதம்:வரவுக்கு எந்த வித குறையும் இருக்காது.

பூசம்:எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும்.

ஆயில்யம்:உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.

 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

சிம்மம்

இன்று தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம்.

மகம்:உங்களுடைய கோரிக்கைகளை மேலதிகாரிகள் ஏற்று நடப்பார்கள்.

பூரம்:விரும்பிய இடத்திற்கு பணி இட மாறுதல் கிடைக்கும்.

உத்திரம் 1ம் பாதம்: பணத்தை விட அறிவை மூலதனமாக வைத்து செய்யப்படும் தொழில் முன்னேற்றம் ஏற்படும்.

 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா

அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

கன்னி

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான  பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே  நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும். 

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:அதே நேரம் சில புதிய வியாபார யுக்திகளை நீங்கள் பயன்படுத்த வேண்டி வரும்.

ஹஸ்தம்:தீவிர முயற்சிகளினாலேயே அரசு சார்ந்த காரியங்கள் நடைபெறும்.

சித்திரை 1, 2 பாதங்கள்:கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும்

 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

துலாம்

இன்று திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் தாமத மான போக்கு வீண் அலைச்சல் ஏற்பட லாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது.  எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும்.

சித்திரை 3, 4ம் பாதங்கள்:முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம்.

ஸ்வாதி:தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும்.

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: தாய் வழி உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம்.

 அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

விருச்சிகம்

இன்று சந்திரன் சஞ்சாரத்தால் தேவையான உதவிகள் கிடைக்கும்.  பணவரத்து அதிகரிக்கும். ராசியாதிபதி செவ்வாய் சஞ்சாரம் வீண் அலைச்சலை தரும்.  உழைப்பு அதிகரிக்கும். சனியின் சஞ்சாரத்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். பயணங்களால் வீண் செலவு உண்டாகும்.

விசாகம் 4ம் பாதம்:நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம்.

அனுஷம்:தேவையில்லாத பணவிரையம் ஆகலாம்.

கேட்டை: காரிய அனுகூலம் கிடைக்கும்

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

தனுசு

இன்று தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணி களை மேற்கொள்வது நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும்.

மூலம்: கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.

பூராடம்:தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறு வாக்குவாதங்கள் வரலாம்.

உத்திராடம் 1ம் பாதம்:வரவுக்கேற்ற செலவுகளும் வந்து சேரும்.

 அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

மகரம்

இன்று குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாக பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:வருங்காலத்திற்குத் தேவையான முதலீடுகளை அதற்குண்டான நபர்களிடம் ஆலோசனைகள் செய்து முதலீடுகள் செய்வீர்கள்.

திருஓணம்: பிரச்சனைகளை முறியடிக்கும் வல்லமை உங்களை வந்து சேரும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: காரிய அனுகூலம் கிட்டும்.

 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கும்பம்

இன்று எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. வீண் அலைச்சல் தடை தாமதம் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிபோடுவது நல்லது. சந்திரன் சஞ்சாரத்தால் எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண் டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்:செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும்.

சதயம் 4ம் பாதம்:   கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மிகுந்த உகந்த காலகட்டமிது.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள்.

 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9  

மீனம்

இன்று நீங்கள் செய்யும் காரியங்களால்  பெருமை ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும். புத்தி சாதூரியம் கூடும்.  ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்ற மான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக  பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.

பூரட்டாதி 4ம் பாதம்:முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.

உத்திரட்டாதி: பொருளாதார வளம் மேம்படும்.

ரேவதி: தொழில் உன்னத நிலையை அடையும்.

 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com