உலகின் சராசரி வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் உயர்ந்தாலும் என்ன ஆகும் தெரியுமா?

உலகின் சராசரி வெப்பநிலை
2 டிகிரி செல்சியஸ் உயர்ந்தாலும் என்ன ஆகும் தெரியுமா?

‘புவி வெப்பமடைதல் 2100ம் ஆண்டளவில் இரண்டு டிகிரி செல்சியஸ் உயர்ந்தாலும் சுமார் ஒரு பில்லியன் மக்களின் மரணத்துக்கு வழி வகுக்கும்’ என கார்பன் வெளியேற்றத்தால் எதிர்காலத்தில் ஏற்படும் தீங்குகளை கணக்கிடும் ஆய்வு ஒன்றில் கணக்கிடப்பட்டுள்ளது.

அடுத்த நூற்றாண்டில் ஏழைகளின் மரணத்துக்கு பணக்காரர்களே பொறுப்பாவார்கள். இதை, ‘அலட்சியமான படுகொலை’ என இந்த ஆய்வு குறிப்பிடுகிறது. ‘உலகின் மிகவும் லாபகரமான சக்தி வாய்ந்த நிறுவனங்களை உள்ளடக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில், நேரடியாகவும் மறைமுகமாகவும் 40 சதவீதத்துக்கும் அதிகமான கார்பன் உமிழ்நீவுக்குக் காரணமாக இருக்கிறது. இது தொலைதூர மற்றும் வளர்ச்சியடையாத சமூகங்களில் உள்ள பில்லியன் கணக்கான மக்களை வெகுவாக பாதிக்கிறது’ என்று இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது, ‘100 டன் என்ற விதிப்படி ஒவ்வொரு முறையும் 1000 டன் அளவிலான பூமியிலிருந்து கிடைக்கும் எரிபொருட்கள் எரிக்கப்படும்போது, எதிர்காலத்தில் ஒருவர் முன்கூட்டியே கொல்லப்படுகிறார்’ என்பதுதான் இந்த விதியாகும். தற்போது பெரும்பாலானவர்கள் பெட்ரோல், டீசல் போன்ற புதைப்படிவ எரிபொருட்களையே நம்பி இருப்பதால், புவி வெப்பமடைவதை யாராலும் தவிர்க்க முடியாது. இதை மேலும் ஊக்குவிப்பது மூலமாக பசுமை இல்ல வாயு உமிழ்வை யாராலும் புறக்கணிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.

எனவே, இதற்கு மாற்றாக புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான அணுகுமுறையை நாம் பின்பற்றியாக வேண்டும் என்றும், காலநிலை மாற்றத்தின் மோசமான விளைவை தணிக்க இத்தகைய ஆற்றல் மூலங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற உயர் கார்பன் எரிபொருட்களை, ஹைட்ரஜன், மின்சாரம் போன்றவற்றால் இயங்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களாக முழுமையாக மாற்றப்பட வேண்டும். 

இதனாலேயே உலக வெப்பமயமாதலை கணிசமாகத் தவிர்க்க முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இருப்பினும், ஒருசாரார் ‘மின்சாரம் தயாரிக்கும்போது ஏற்படும் கார்பன் உமிழ்வை யாராலும் தடுக்க முடியாது’ என்றும் கூறுகின்றனர். அதேபோல மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளில் நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்கள் பயன்படுத்தப்படுவதாலும் பூமி மாசுபடும் என்றும் சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com