கேரளம் வெப்ப நிலையில் மாற்றம்: அதிர வைக்கும் ஆய்வு நிறுவன அறிக்கை!

கேரளம் வெப்ப நிலையில் மாற்றம்: அதிர வைக்கும் ஆய்வு நிறுவன அறிக்கை!

லகை அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம் இந்தியாவின் கேரளம், புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளை மிகப்பெரிய அளவில் பாதித்திருக்கிறது. பருவநிலை மாற்ற தாக்கத்தால் அந்த பகுதிகளில் கடந்த கால தன்மையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று ஆய்வு நிறுவனத்தின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.

உலகை அச்சுறுத்தும் மிகப்பெரிய பாதிப்பாக பருவநிலை மாற்றம் உருவெடுத்து இருக்கிறது என அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும், ‘க்ளைமேட் சென்டர்’ என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கும் அறிக்கையின் முடிவின்படி, பருவநிலை மாற்றம் உலகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கி வருகிறது. குறிப்பாக, விவசாயத் துறையை இது பெருமளவில் பாதித்திருக்கிறது இந்த மாற்றம். மேலும், உலகம் முழுவதும் இருக்கக்கூடிய வளர்ச்சி அடைந்த நாடுகள், குறிப்பாக ஜி20 நாடுகளில் வெப்பநிலை மிக அதிக அளவில் உயர்ந்திருக்கிறது. சிறிய நாடுகளில் கூட பருவநிலை மாற்றம் பெரும் பாதிப்புகளை உண்டாக்கியிருக்கிறது.

புவியின் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் மாசு அதிகரிப்பு இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறது. இதனால் உலகில் இருக்கக்கூடிய 98 சதவீத மக்கள், சுமார் 800 கோடி பேர் அதிக அளவிலான வெப்பத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், உலகில் மிக நீண்ட கோடை காலமாக இந்த கோடை காலம் மாறி இருக்கிறது. அதுமட்டுமின்றி, இந்தக் கோடை காலத்தில் அதிக அளவிலான வெப்பங்கள் பதிவாகி இருக்கின்றன.

குறிப்பாக, இந்தியாவின் தென் மாநிலங்களான கேரளம், புதுச்சேரி மற்றும் அதோடு சேர்த்து அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான வெப்பநிலை 3 டிகிரி அதிகரித்து இருக்கிறது. இது மிகப்பெரிய மாறுதலாகக் கருதப்படுகிறது. இம்மாற்றத்தின் மூலம் இந்த மூன்று பகுதிகளும் அதிக அளவிலான வெயிலைக் கண்டிருக்கின்றன. இதனால் இந்த மாநிலங்கள் கடந்த காலத்தில் இருந்த தன்மையில் இருந்து மாறத் தொடங்கி இருக்கிறது. மேலும், அந்தப் பகுதிகளில் பருவநிலை மாற்றத்தின் பாதிப்பு தற்போது வரை நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com