மல்லி இலையின்  மகத்துவம் !

மல்லி இலையின் மகத்துவம் !

கொத்தமல்லி வாய் துர்நாற்றத்தை போக்கும். குடல் எரிச்சலை தடுக்கும். பசியை தூண்டும். உணவையும் எளிதாக செரிக்கச் செய்கிறது. இதன் நார்ச்சத்து வயிற்றில் உள்ள தேவையற்ற கசடுகளை வெளியேற்றும். நார்ச்சத்து ,இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் ஏ,வைட்டமின் பி ஆகியன இதில் அதிகம் உண்டு. கொத்தமல்லி அதிகம் சாப்பிடுகிறவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. இன்சுலின் சுரப்பை தூண்டிவிடும் வல்லமை இதற்கு இருப்பதால் சர்க்கரை நோய் அபாயத்தையும் தள்ளிப் போடுகிறது. மூல நோயாளிகளுக்கும் இது சிறந்த மருந்தாகும் .கல்லீரலை பலப்படுத்த கொத்தமல்லி உதவும். 

ரு கைப்பிடி கொத்தமல்லி இலையை கழுவி சுத்தம் செய்து, மிக்ஸியில் அரைகுறையாக அரைத்து, அப்படியே வாயில் போட்டு குதப்ப வேண்டும். இப்படி தினமும் இரண்டு வேலை செய்தால் வாய்ப்புண், வாய் துர்நாற்றம், ஈறுகளில் ரத்த கசிவு போன்ற பிரச்சனைகள் மறைந்து விடும். 

கொத்தமல்லி இலை ,தயிர் மற்றும் கற்றாழை ஜெல்லை சரிசமமாக எடுத்துக் கொள்ளவும். இதை நன்கு அரைத்து இதில் ஒரு டீஸ்பூன் அரிசி மாவு சேர்த்து கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ சருமம் மென்மை யாகவும் பொலிவுடன் இருக்கும். 

கொத்தமல்லி இலையை நன்றாக விழுதாக அரைத்து நெற்றியில் பூசிக்கொண்டு, கொஞ்ச நேரம் படுத்திருந்தால் எப்படிப்பட்ட தலைவலியும் சரியாகிவிடும். 

கொத்தமல்லி இலைகளைக் கழுவி அரைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் சாறு எடுக்கவும். சீரகப்பொடி ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு அதில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு நன்கு கலந்து கொடுக்கவும். அஜீரணத்தை போக்கி,பசி எடுக்கச் செய்யும் மருந்து இது. 

கொத்தமல்லியை உடைத்துப் பார்த்தால் அதற்குள் துளியூண்டு சைஸில் இரண்டு விதைகள் இருக்கும். இந்த விதைகளை பாலில் கலந்து சாப்பிட்டால் நினைவாற்றல் மேம்படும். 

த்த சோகை பிரச்சனை உள்ளவர்கள், கொத்தமல்லிக் கீரை உடன் உளுத்தம் பருப்பு வறுத்து சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தி ஆகும். 

கொத்தமல்லி சாற்றில் கருஞ்சீரகத்தை ஊற வைத்து, உலர்த்தி பொடியாக்கி தினமும் ஒரு கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு நேரத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குணமாகும். 

தினமும் இரவில் படுக்கும் முன் கொத்தமல்லி சாறும், எலுமிச்சை சாறும் கலந்து உதடுகளில் தடவிக் கொள்ளவும். கருமை காணாமல் போய் உதடுகள் பளபளப்பாகும். மூக்கைச் சுற்றி கரும்புள்ளிகள் இருந்தால் அங்கும் இந்த கலவையை தடவி அரை மணி நேரம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் முகம் கழுவலாம். தினசரி இவ்வாறு செய்ய நல்ல குணம் தெரியும். 

பால், வெள்ளரிச் சாறு சம அளவு எடுத்துக் கொண்டு இதில் பாதி அளவு கொத்தமல்லி சாறு சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு சோப் இல்லாமல் வெறும் தண்ணீரில் முகம் கழுவவும். இது வெயிலில் அலைவதால் முகத்தில் ஏற்படும் கருமையைப் போக்கி சருமத்தை மென்மையாக்கும். 

ரு டம்ளர் தண்ணீரில் கொஞ்சம் கொத்தமல்லி இலையுடன் ஒரு ஏலக்காய் தட்டி போட்டு கொதிக்க வைத்து கற்கண்டு அல்லது வெல்லம் கலந்து காப்பி,  டீக்கு பதிலாக காலை, மாலை வேலைகளில் குடிக்கலாம். இதனால் பித்தம் தணியும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com