எந்த Doormat எங்கு பயன்படுத்துவது என்ற சந்தேகமா? இதைப் படியுங்கள்!

பொதுவாக நமது வீட்டில் எந்த டோர் மேட்டை வாங்குவது எந்த டோர் மேட்டை எங்கு பயன்படுத்துவது என்ற சந்தேகம் அனைவரிடமுமே நிச்சயம் இருக்கும். அந்த சந்தேகத்தின் விடைத்தான் இந்த தொகுப்பு.
Door mats
Door matswww.pexels.com

1. Scraper Mats:

Scraper Mats
Scraper Matscanadamat.com

ந்த மேட் வெளியிலிருந்து வீட்டுக்கு நுழையும்போது வாசலில் பயன்படுத்துவது. இந்த மேட் சுரசுரப்புடன் இருப்பதால் நம் பாதத்தில் உள்ள கரைகள் நீங்குவதற்கு உதவியாக இருக்கும்.

2. Interior mats:

Interior mats:
Interior mats:dusaan.com

ந்த மேட் வீட்டிற்குள் பயன்படுத்துவது. இந்த மேட்டின் வடிவமைப்பினால் எளிதாக தண்ணீர் உறிஞ்சி வழுக்காமல் இருக்க உதவும். இந்த மேட்டில் ஏகப்பட்ட டிசைன்களும் உள்ளன. Interior matsஐ காட்டன், ரப்பர், PVC , தேங்காய் நார் போன்றவற்றினால் செய்வார்கள். Interior mats வீட்டிற்குள் பயன்படுத்துவதால் நீண்டநாட்கள் பயண்படுத்த முடியும்.

3. Decorative mats:

Decorative mats
Decorative matsnestasia.in

ந்த மேட் வீட்டிற்குள்ளும் வெளியேவும் பயன்படுத்துவார்கள். இது Decorative mats என்பதால் உங்களுக்கு பிடித்த டிசைனை கொடுத்து வடிவமைக்க சொல்லலாம். உதாரணத்திற்கு உங்கள் கம்பேனிக்கு ஒரு மேட் வேண்டுமென்றால் அந்த கம்பேனியின் லோகோவை பயன்படுத்தி Decorative mats வாங்கலாம். அது மட்டுமல்லாமல் உங்களுக்கு பிடித்த விளையாட்டுகளின் லோகோ, பிடித்தமான விஷயங்களில் உள்ள சிம்பல் ஆகியவற்றை இந்த மேட்டில் வடிவமைக்க கூறி Decorative mats வாங்கலாம்.

4. Anti-Fatigue mats:

Anti-Fatigue mats:
Anti-Fatigue mats:m.media-amazon.com

ந்த மேட்டை இன்று அனைவருமே பயன்படுத்த வேண்டியது அவசியம். ஏனெனில் இந்த மேட் 8 மணி நேரம் உழைத்துவிட்டு களைப்புடன் வரும் ஆட்களுக்கு நிச்சயம் தேவைப்படும். பஞ்சுபோல் இருப்பதால் இந்த மேட்டில் நிக்கும்போது கால் மூட்டு வலி, கால் பாத வலிகள் போன்றவற்றைப் போக்கும்.

இதையும் படியுங்கள்:
வீட்டின் சுவற்றை அழகாக மாற்ற வேண்டுமா? இந்த எளிமையான வழிகள் உங்களுக்குத்தான்!
Door mats

5. Drainage mats:

Drainage mats:
Drainage mats:m.media-amazon.com

றுதியாக பார்க்கப்போகும் இந்த Drainage mats சமயலறைக்கு பயன்படுத்தும் மேட். சமைக்கும்போது எதாவது கரைப்பட்டால் இந்த மேட்டில் உள்ள ஓட்டைகள் அந்த கரைகளை இழுத்துக்கொள்ளும். இதனால் இது சமயலறையை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும்.

உங்கள் தேவைக்கு ஏற்றவாரு இந்த மேட்களைப் பயன்படுத்தினால் வீடு சுத்தமாகவும் அழகாகவும் உங்கள் உடம்பிற்கும் நன்மைத்தருபவையாகவும் இருக்கும். இந்த மேட்களை கடைகளில் கிடைக்கவில்லை என்றால் ஆன்லைனில் எல்லா வகையான மேட்களும் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com