அதிர்ஷ்ட மீன் வளர்ப்பின் அற்புதம் தெரியுமா உங்களுக்கு?

அதிர்ஷ்ட மீன் வளர்ப்பின் அற்புதம் தெரியுமா உங்களுக்கு?

வீட்டில் மீன் தொட்டி வைத்து, கலர் கலராக மீன்களை வளர்ப்பது வீட்டுக்கு அழகு சேர்ப்பது மட்டுமில்லாமல், மீனின் அசைவுகள் மனதுக்கு நிம்மதி மற்றும் அமைதியை ஏற்படுத்துகிறது. மேலும், வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்குகிறது. உணவு நிலையம், சூப்பர் மார்கெட், வாடிக்கையாளர்கள் அதிகம் கூடும் இடங்கள், துணிக்கடை, ரெடிமேட் கடை , பழக்கடை, காய்கறி விற்கும் இடங்களில் என பல்வேறு இடங்களிலும் இந்த அதிர்ஷ்ட மீன்களை தொட்டிகளில் வைத்து வளர்ப்பார்கள். இதனால்  தொழில், வியாபாரம் பெருகும் என்பது நம்பிக்கை. இனி, ராசி மீன்களை வளர்ப்பதால்  ஏற்படும் அற்புதம் குறித்துக் காண்போம்.

* ராசி மீன்கள் வீட்டின் நிதி நிலைமையை சரியாக வைத்து, செல்வத்தை ஈர்க்கும்.

* உங்கள் வீட்டில் ஒரு அமைதியான சூழ்நிலையை உருவாக்கும். இவை வெற்றி மற்றும் நல்லிணக்கத்துக்கு முக்கியமாகக் கருதப்படுகின்றன.

* மீன்கள் வாழ்வாதாரத்தையும் நேர்மறையையும் குறிக்கின்றன.

* தொட்டியில் நகரும் ஒரு மீன் நேர்மறை அதிர்வுகளை வெளியிடும் என்று நம்பப்படுகிறது.

* வீட்டில் ஒரு செல்லப்பிள்ளையின் நேர்மறையான அதிர்வை மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் மீன்கள் ஈர்க்கின்றன.

மீன் தொட்டியை எங்கு / எந்த திசையில் வைக்க வேண்டும்:

* வீட்டுக்குள் நுழையும்போது, இடது பக்கமாக மீன் தொட்டி இருக்கும்படி வைக்க வேண்டும்.

* வடகிழக்கு திசையில் மீன் தொட்டியை வைத்தால் வீட்டில் அன்பு அதிகரிக்கும்.

* குடும்பத்தில் செல்வம் அதிகரிக்க மீன் தொட்டியில் கண்டிப்பாக ஒன்பது மீன்களாவது இருக்க வேண்டும். அதற்குக் குறைவான எண்ணிக்கையில் மீன் வளர்க்கக் கூடாது.

* படுக்கையறையிலோ, சமையலறையிலோ மீன் தொட்டியை வைக்கக்கூடாது.

* மீன் தொட்டியில் உள்ள மீன்களின் நிறமும் மிகவும் முக்கியம். அதில் எட்டு மீன்கள் சிவப்பு, ஆரஞ்சு அல்லது கோல்டன் நிறங்களிலும், ஒரு மீன் கண்டிப்பாக கருப்பு நிறத்திலும் இருக்க வேண்டும்.

* மீன் தொட்டியில் கருப்பு மீன் இருந்தால், அது வீட்டினுள் நுழையும் எதிர்மறை ஆற்றல்களை முற்றிலும் உறிஞ்சிவிடும் என்பது நம்பிக்கை.

* ஒருவேளை அந்த கருப்பு மீன் இறந்துவிட்டால், அது வீட்டில் உள்ள அனைத்து கெட்ட சக்திகளையும் தன்னுள் ஈர்த்துக் கொண்டது என்று அர்த்தம்.

* இது வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ உங்கள் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது என்று அர்த்தம்.

* சுறுசுறுப்பாக இருக்கும் மீன்களைத் தேர்ந்தெடுத்து தொட்டியில்  விடவும். இது ஆற்றலின் சீரான ஓட்டத்தை உறுதி செய்கிறது.

* மீன் தொட்டியை பராமரிக்க தேவையான வடிகட்டிகளைப் பயன்படுத்தவும்.

* மீன் தொட்டியை காற்றோட்டம் உள்ள இடங்களில் வைக்க வேண்டும்.

* தொட்டியில் அனைத்து மீன்களும் சுற்றி வருவதற்கு போதுமான இட வசதி இருக்க வேண்டும்.

* கண்ணாடி தொட்டியோ, அக்ரிலிக் செய்யப்பட்ட தொட்டியோ சிறந்தது.

* மீன் தொட்டியின் தண்ணீரை எப்போதும் முழுமையாக மாற்றக்கூடாது.

* வாரம் ஒரு முறை 20 சதவீத அளவு தண்ணீரைத்தான் மாற்ற வேண்டும்.

* தொட்டியில் வடிகட்டுதல் பில்டர் வைத்தால் மாதத்துக்கு ஒரு முறை 50 சதவீத தண்ணீரை மாற்றினால் போதுமானது.

* தண்ணீரில் உருவாகும் பாக்டீரியாக்கள் மீன்களை உயிர் வாழச் செய்கிறது.

* பெரிய மீன் தொட்டியாக இருந்தால், பராமரிப்பது சுலபமாக இருக்கும். மீனின் ஆயுட்காலமும் நீடிக்கும்.

* மீன் தொட்டியில் உள்ள தண்ணீர் சுத்தமாக இருந்தால், மீன்கள் உயிர் வாழ அதுவே போதும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com