ரத்த சோகையைப் போக்கும் ஐவகை உணவுகள்!

ரத்த சோகையைப் போக்கும் ஐவகை உணவுகள்!

'அனீமிக்' எனப்படும் ரத்த சோகை நோய் நம் நாட்டுப் பெண்கள் பலருக்கும் ஏற்படக்கூடிய ஒன்று. இதற்கான காரணம் அவர்கள் உணவில், உடலின் ரத்த விருத்திக்குத் தேவையான வைட்டமின் மற்றும் தாதுக்கள் அடங்கிய காய்கறி, கீரை, நட்ஸ் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளத் தவறுவதே ஆகும். ரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டு சோர்வுற்றுக் காணப்படும் பெண்கள் தங்கள் உணவில் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டிய சில முக்கிய உணவுகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1. முருங்கைக் கீரை: இதில் அதிக அளவு இரும்புச் சத்தும் மக்னீசியமும் உள்ளன. இவை இரத்த சிவப்பு அணுக்களைப் பெருகச்செய்து ரத்த சோகையை போக்குகிறது.

2. பாசிப்பருப்பு கிச்சடி: இதிலிருக்கும் பலவகை வைட்டமின்களும் மினரல்களும் உடலின் முக்கிய உறுப்புகளுக்கு சீராக ரத்த ஓட்டத்தை செலுத்தி, உடல் சோர்வை நீக்கி சுறுசுறுப்பு அடையச் செய்கிறது.

3. பீட்ரூட்: இதில் இரும்புச் சத்து, காப்பர், மக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் B1, B2, B6, B12, C ஆகியவை உள்ளன. இவை ரத்தத்தின் சிவப்பு அணுக்களின் உற்பத்தியை பெருகச் செய்கின்றன.

4. எள்: இதிலுள்ள இரும்புச் சத்து, சிங்க், செலீனியம், ஃபோலேட், வைட்டமின் B6, E ஆகியவை ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகின்றன.

5. பேரீச்சம் பழம், உலர் திராட்சை: இவற்றில் இரும்புச் சத்து, காப்பர், மக்னீசியம், வைட்டமின் A, C ஆகியவை உள்ளன. இவை ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையைப் பெருக்கி உடனடி சக்தியை உடலுக்கு அளிக்கிறது.

மேற்கூறிய உணவுகளை பெண்கள் அடிக்கடி உட்கொண்டு ரத்த சோகை நோய் தங்களைத் தாக்காமல் காத்துக்கொள்வது அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com