கொலு வைக்கப்போறீங்களா? தயார் படுத்திக்க பலே டிப்ஸ்!

கொலு வைக்கப்போறீங்களா? தயார் படுத்திக்க பலே டிப்ஸ்!
nalam tharum Navarathiri
nalam tharum Navarathiri

-    உமா நாராயணசுவாமி

-    எஸ். ராஜம் 

 

* வராத்திரி கொலுவின் போது பிளாஸ்டிக் தோரணங்களை தவிர்த்து விட்டு மாவிலை தோரணம் கட்டலாம். அது மங்களகரமானது மட்டுமல்ல கிருமிகளை விரட்டக் கூடியதும் ஆகும்.

* பொம்மைகளை பெட்டியில் இருந்து எடுத்ததும் துணியால் தூசி போக துடைத்து விட்டு பஞ்சில் மண்ணெண்ணெய் தொட்டு எடுத்து சுத்தம் செய்யலாம். பிறகு விபூதி தடவி துடைத்து விட்டால் பளிச்சென்று இருக்கும்.

* ரப்பாச்சி மற்றும் மர பொம்மைகளை வார்னிஷ் அடித்து வைத்தால் புதிது போல் பளபளக்கும்.

* ரையில் ஜமுக்காளத்தை விரித்து மணலை பரப்பினால் கொலு முடிந்ததும் சுத்தம் செய்வது சுலபம்.

* கொலு தொடங்க ஒரு வாரம் முன்பு சிறு மண் தொட்டிகள், கிண்ணங்களில் மண் நிரப்பி நெல், வெந்தயம், மல்லி, கம்பு போன்றவற்றை ஊன்றி வைத்தால் செடிகள் வளர்ந்து விடும். பார்க்கில் ஆங்காங்கே வைக்கலாம்.

* பச்சை வண்ணப் பொடியை சீராக தூவி புல்வெளி உருவாக்கலாம். ரோடு போட மணலில் கருப்பு நிற இங்க் கலந்தால் தார் ரோடு போல இருக்கும். அல்லது கருப்பு நிற காகிதத்தை கத்தரித்து ரோடு அமைக்கலாம்.

* சாம்பிராணி புகை, கற்பூரம் இவற்றை படிகளின் அருகில் காட்டினால் பொம்மைகளின் மேல் புகைபடியும். படிகளின் மேல் விரித்துள்ள துணியில் தீப்பிடிக்கவும் வாய்ப்புண்டு. அதனால் தூரத்தில் இருந்து காட்டுவது நல்லது.

பார்க்கில் வைக்கும் செடிகளில் கடுகும், எள்ளும் வைப்பதை தவிர்க்கவும் அவை நற்காரியங்களுக்கு உகந்தவை அல்ல. நெல், கேழ்வரகு, வெந்தயம், கொத்துமல்லி போன்றவற்றை பயன்படுத்தலாம்.

* வராத்திரியின் போது கொலு பொம்மைகள் வாங்குவது நம் சம்பிரதாயம். கொலு வைக்கும் கோயில்களுக்கும் பொம்மைகள் வாங்கித் தரலாம்.

* கொலு பார்க்க வருபவர்களுக்கு ஒரு பொம்மையாவது தாம்பூலத்துடன் பரிசாக தரலாம்.

* கொலு முடிந்ததும் பொம்மைகளை பருத்தித் துணி அல்லது செய்தித்தாள்களில் சுற்றி வைத்தால் அவற்றின் நிறம் மங்காமல் இருக்கும்.

* ட்டைப் பெட்டிகளில் பொம்மைகளை எடுத்து வைக்கும் பொழுது அதில் என்ன பொம்மைகள் உள்ளன என்பதை வெளிப்புறத்தில் எழுதி வைக்கவும்.

* வராத்திரி பூஜையின் போது எந்த நைவேத்தியத் தையும் கொதிக்க கொதிக்க வைப்பது சரியல்ல. பதமான சூட்டில் இருக்கும் போது கிண்ணம் அல்லது தட்டில் சிறிதளவு வைக்காமல், முழுவதுமாக வைக்க வேண்டும்.

* கொலுவில் 'பார்க்' அமைக்கும்போது தரையில் வைக்காமல் பெஞ்ச், அல்லது கட்டிலில் வைத்தால், வந்தவர்கள் நின்றபடியே பார்க்கும்போது நிறைய நேரம் ரசிக்க முடியும்.

* புல் தரைகளுக்கு உமியை பச்சை சாயத்தில் நன்கு நனைத்து, ஈரமண்ணின் மேல் நெருக்கமாக தூவி விட்டால், நிஜ புல் தரை போல் பறக்காமலும் இருக்கும்.

* பாசி கோர்க்கும் வெள்ளை ஒயரில் நாம் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்திருக்கும் ஏரோப்பிளேன், ஹெலிகாப்ட்டர் போன்ற பொம்மைகளை கட்டித் தொங்கவிட்டால், அது ஃபேன் காற்றில் இங்கும் அங்குமாய் லேசாய் அலைவது பறப்பது போலவே இருக்கும். ஒயர் இருப்பது கண்ணுக்குத் தெரியவும் செய்யாது.

இதையும் படியுங்கள்:
சேர்ந்துவிடும் வெற்றிலையும் வாழைப்பழமும் – என்ன செய்யலாம்?
கொலு வைக்கப்போறீங்களா? தயார் படுத்திக்க பலே டிப்ஸ்!

* மிகச் சிறிய கண்ணாடி, பீங்கான் பொம்மைகளை வைக்கும் போது கீழே விழுந்து உடையாமல் இருக்க பழைய பாட்டில் மூடிகளில் களிமண்ணை வைத்து, அதன் மேல் பொம்மைகளை அழுத்தி நிறுத்தி வைக்கலாம்.

* வீட்டிலுள்ள பழைய பவுடர் டப்பாக்களை 'கில்ட்' பேப்பரால் சுற்றி படிகளின் இரு ஓரங்களிலும் வைத்தால். கொலு தனி களை கட்டும். குழந்தைகளை விட்டே இதைச் செய்யச் சொல்லலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com