நீங்கள் நினைத்ததை சாதிக்க இந்த 3 விஷயங்களைப் பின்பற்றுங்கள்! 

Follow these 3 things to achieve.
Follow these 3 things to achieve.

னிதர்களாகிய அனைவருக்குமே வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கு என்ன செய்வது எங்கே தொடங்குவது என்ற கேள்வி அனைவருக்கும் எழும்பும். அத்தகைவர்கள் இந்த 3 விஷயங்களைப் பின்பற்றுங்கள்.

  1. மக்களோடு பழகுங்கள்: 

ல நேரங்களில் நாம் தனிமையாக இருப்பது நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், வாழ்க்கையில் நீங்கள் எதையாவது சாதிக்க வேண்டுமென்றால் மக்களுடன் பழகுவது, பேசுவது, அவர்களைப்பற்றி புரிந்துகொள்வது அவசியமாகும். நம்மால் எல்லா நேரங்களிலும் மக்களுடைய தொடர்பின்றி இருக்க முடியாது. நீங்கள் ஒரு விஷயத்தைப் பற்றி அறிய வேண்டுமென்றாலோ, அல்லது ஏதோ ஒரு உதவி கேட்க வேண்டும் என்றாலோ, அல்லது நீங்கள் செய்யும் செயல்களைப் பற்றி பகிரவாவது ஒரு நபரின் பழக்கம் உங்களுக்குத் தேவைப்படுகிறது. இத்தகைய நபர்கள் நீங்கள் சோகமாக இருக்கும் சமயங்களிலும் உங்களுக்கான உந்துதலைக் கொடுப்பார்கள். 

  1. சோகத்தை ஆற்றலாக மாற்றுங்கள்: 

ங்கள் சோகத்தை ஆற்றலாக மாற்றும் கலையை நீங்கள் கற்றுக் கொண்டால், வாழ்வில் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். உலகில் எந்த ஒரு செயலைச் செய்ய வேண்டுமானாலும் தொடக்கத்தில் மிகவும் கடினமாகத்தான் இருக்கும். அனைவருக்குமே தங்களுடைய வாழ்விலிருந்து அவர்களாகவே செய்து கற்றுக்கொண்ட அனுபவங்கள் நிச்சயம் இருக்கும். இதில் பெரும்பாலும் நாம் செய்யும் தவறுகளால் ஏற்பட்ட மோசமான விளைவுகளே இருப்பதால், அதை நினைத்து வருத்தப்படுவதாலேயே அடுத்தது என்ன என்பது பற்றி நம்முடைய மூளை சிந்திக்க மறுக்கிறது. எனவே இத்தகைய மோசமான அனுபவங்கள் நம் வாழ்க்கையில் ஒரு அங்கம்தான் என்பதைப் புரிந்துகொண்டு, இவற்றையெல்லாம் கடந்தால்தான் சாதிக்க முடியும் என்ற ஆற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள். 

  1. உங்களுடைய வெற்றி மற்றும் தோல்வியை ஆராயுங்கள்: 

ம்முள் பலருக்கு இருக்கும் பிரச்சனை என்னவென்றால், வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாடும் நாம், தோல்வியை சரிவர புரிந்துகொள்ளாமல் அதிகம் துவண்டு விடுகிறோம். எனவே உங்கள் வாழ்வில் வெற்றி தோல்வி இரண்டையும் சமமாக எடுத்துக்கொண்டு, அவற்றுக்கான காரணங்களை ஆராயக் கற்றுக்கொள்ளுங்கள். ஒரு விஷயத்தில் உங்களுக்கு வெற்றி கிடைத்துவிட்டது என்றால், அதை தொடர்ந்து எப்படி தக்க வைப்பது என்பது பற்றி சிந்தியுங்கள். ஒரு செயலில் நீங்கள் தோற்று விட்டீர்கள் என்றால், அதிலிருந்து மீண்டு அதை எப்படி வெற்றியடையச் செய்யலாம் என யோசிங்கள். ஆனால் ஒருபோதும் உங்கள் முயற்சிகளை மட்டும் கைவிட வேண்டாம். 

குறிப்பாக, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதை செய்வதாக இருந்தாலும், பிறரை பழி வாங்குவதற்காகவோ அல்லது பிறருக்கு உங்களை நிரூபிப்பதற்காகவோ செய்யாதீர்கள். நீங்கள் ஒரு மலையில் ஏறும்போது மலை உச்சியில் இருந்து இந்த உலகத்தை உங்களால் பார்க்க முடியும் என்ற சிந்தனையில் ஏறுங்கள். மாறாக, இந்த உலகில் இருப்பவர்கள் மலை உச்சியில் இருக்கும் நம்மைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஏறாதீர்கள். இந்த புரிதல் உங்களை எதை வேண்டுமானாலும் சாதிக்க வைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com