படித்ததை மறக்காமல் இருப்பது எப்படி?

படித்ததை மறக்காமல் இருப்பது எப்படி?

ன்றைய காலங்களில் மாணவர்களாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி, அவர்களைக்  கடுமையாகத் திட்டினால் கூட அந்த அளவிற்குக் கோபம் வராது. ஆனால், படியுங்கள் என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும் இமயமலையே சாய்ந்தது விட்டதுபோல் கோபம் கொள்வார்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் சிலர் இருக்கையில், தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும், பள்ளி, கல்லூரி படிப்புகளை நல்லபடியாக முடிப்பதற்காக  தனியாக பயிற்சி வகுப்பு, அல்லது நூலகம் சென்று தேர்வுகளுக்காகப் படிக்கின்றனர் பலர்.  அப்படிப் படிக்கும் சிலர் நன்றாகப் படித்தும் தேர்வுக்கு சென்றவுடன் மறந்து விடுகிறது என்று வருத்தப்படுகிறார்கள். இதனால் அவர்களின் வாழ்க்கையில் பல பின்னடைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கிறது. இப்படி மறதியால் பின்னடைவைச் சந்திக்கும் மாணவர்களுக்கு, மறக்காமல் படிப்பது எப்படி என்று எழுத்தாளரும், தன்னம்பிக்கை பேச்சாளரும் ஆன வெ. இறையன்பு  அவர்கள் இப்படிக் கூறுகிறார்.

படித்து முடித்த ஒவ்வொரு மணி நேரத்திற்குப் பிறகு, பதினைந்து நிமிடம், அதைத் திரும்பச் சொல்ல வேண்டும். படிப்பது என்பது, படித்துவிட்டு அடுத்ததற்குத் தாவுவது அல்ல. படிப்பதற்கு ஒரு படிநிலை உள்ளது.

படிப்பதில் உள்ள 6R என்னும் படிநிலைகள்

* Reading  

* Remembering

* Recapping,

* Reproduction

* Re-writing

* Revision

என்ற ஆறு ’R’ படிகளில் படிக்க வேண்டும்.  

1. நம்முடைய ஆழ்மனம், மேல்மனத்தைக் காட்டிலும், வலிமையானது. எனவே, முதல் முறை படிக்கிற போது மகிழ்ச்சியாகப் படியுங்கள். அப்படிப் படித்தால், நீங்கள் படித்தது, உங்களுடைய ஆழ்மனத்திற்குள் சென்றுவிடும். 

2. அடுத்ததாக, நினைவுபடுத்திப் படியுங்கள். 

3. மூன்றாவதாக, என்ன படித்தோம் என்பதை, சொல்லிப் பாருங்கள்.

4. நான்காவதாக, அப்படி நீங்கள், சொல்லிப் பார்த்ததுச் சரியாக இருக்கிறதா? என்று பாருங்கள்.

5. படித்ததை குறிப்புகளாக எழுதுங்கள்.

6. மீண்டும் ஒருமுறை வாசியுங்கள். இப்படி வாசித்தால், வாழ்க்கையில் எதுவுமே மறக்கவே மறக்காது.

படித்தது மறக்கிறது என்று சொன்னால், அதற்கு முதல் காரணம் ஆர்வம் இல்லாமல் படிப்பது. அடுத்த காரணம், கவனச்சிதறல், படிக்கிறபோதே, வேறு எதையோ நினைப்பது. இந்த இரண்டையும் தவிர்க்க வேண்டும்.

அதற்கு வெ.இறையன்பு  அவர்கள், கூறியதுபோல் படித்தால், சிறப்பாகப் படித்து, தேர்வில் மறக்காமல் எழுதி, வாழ்வில் நிச்சயம் உயரலாம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com