விநாயகர் சதுர்த்தி வரப்போகிறது. விநாயகர் சதுர்த்தி என்றாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது கொழுக்கட்டைதான். அன்று அனைவரது வீடுகளிலும் கொழுக்கட்டை செய்வார்கள். விநாயகருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டையை செய்து அவருக்கு நைவேத்தியம் செய்து வழிபடுவது வழக்கம்.
இத்தகைய மணமணக்கும் கொழுக்கட்டையை பலர் பலவிதமாகச் செய்வார்கள். இந்தப் பதிவில் கொழுக்கட்டையை எப்படி வாழைப்பழத்தை வைத்து செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - ½ கப்
தண்ணீர் - ¾ கப்
ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்
சர்க்கரை - ½ கப்
நெய் - சிறிதளவு
வாழைப்பழம் - 2
முதலில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர் அதில் இரண்டு வாழைப்பழம் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும்.
பின்னர் அதில் அரிசி மாவு, நெய் சேர்த்து கிளறி, சிறிது நேரம் ஆற வைக்கவும்.
இறுதியாக மாவு ஆறியதும் சிறு சிறு உருண்டை களாகப் பிடித்து இட்லி தட்டில் வைத்து வேக வைக்கவும்.
பத்து நிமிடங்கள் வரை வெந்ததும் சுடச்சுட வாழைப்பழ கொழுக்கட்டை தயார்.
இந்த வாழைப்பழ கொழுக்கட்டை விநாயகருக்கு மிகவும் பிடிக்கும். இதை பிள்ளையாருக்குப் படைத்து வழிபட்டால், நீங்கள் வேண்டியது கிடைக்கும். இத்துடன் இந்த கொழுக்கட்டையை வீட்டிலுள்ள அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கும் கொழுக் கட்டையுடன் சேர்த்து வாழைப்பழத்தின் ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். மற்ற கொழுக்கட்டைகளை விட இதன் சுவை சிறப்பாக இருக்கும்.