ஜவ்வரிசி மாவு வடை!

ஜவ்வரிசி மாவு வடை!

தேவையான பொருட்கள்:

 ஜவ்வரிசி பவுடர் -ஒரு கப்

 அரிசி மாவு-1 டேபிள் ஸ்பூன்

 பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ் -ஒரு கைப்பிடி 

 பொடியாக சீவிய கேரட் -1

 பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, மல்லித்தழை- 2 ஸ்பூன்

 உப்பு , எண்ணெய் -தேவைக்கேற்ப. 

செய்முறை:

வ்வரிசி பவுடரில் தண்ணீரில் ஊற்றி ஊற வைக்கவும். நன்கு ஊறியதும் மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் அதில் கொட்டி கலக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் மாவை வடையாகத் தட்டி இருபுறமும் வேக விட்டு எடுக்கவும். 

ஜவ்வரிசியை மிக்ஸியில் இட்டு பொடித்தால் பவுடராகிவிடும். அதில் தண்ணீர் விட்டு ஊற வைத்து விட்டு, மற்ற காய்கறிகளை அரிவதற்குள், அது ஊறிவிடும். காயும் எண்ணெயில் போட்டு எடுக்க, பத்தே நிமிடத்திற்குள், டீயுடன் கொறிக்க அருமையான ஸ்நாக்ஸ் ரெடி. சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்களுக்கு, இதை செய்து அளவோடு சாப்பிட கொடுக்கலாம். திடீர் விருந்தினர்களை சமாளிக்க இப்படி செய்து அசத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com