சுவை மிகுந்த இனிப்பு பட்சணங்கள்!

சுவை மிகுந்த இனிப்பு பட்சணங்கள்!

ஜூப்ளி கேக்!

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1 கப் 

சர்க்கரை- 1 1/2 கப் 

தேங்காய் - 1 கப் 

நெய் - 200 கிராம் 

முந்திரி பருப்பு - 10 

ஏலக்காய் - ஒரு சிட்டிகை 

திராட்சை - 4 

 செய்முறை :

வானொலி அடுப்பில் வைத்த சூடானதும் சர்க்கரையை அதில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதி வந்ததும் தேங்காயை அரைத்து அதில் போட்டு கடலைமாவையும் போட்டு கிளறவும். ஏலக்காய் பொடி, முந்திரியை போட்டு  நன்றாக புசுபுசு என்று வரும் பொழுது நெய்யை ஊற்றி நன்றாக கலந்து தாம்பாளத்தில் நெய் தடவி இந்த கலவையை அதில் கொட்டி ஆறியதும் வில்லை போடவும் சூடான சத்தான ஜூப்ளி  கேக் தயார்.

பலாப்பழ அல்வா!!!

தேவையான பொருட்கள் :

கனிந்த பலாசுளைகள் - 20 

வெல்லம் -100 கிராம் 

தேங்காய் - ஒரு மூடி ( தேங்காய் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்)

நெய் - 50 கிராம் 

பச்சரிசி மாவு - ஒரு டீஸ்பூன்

முந்திரி - 10 

ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை 

 செய்முறை :

லாசுளைகளை கொட்டை நீக்கி துண்டுகளாக்கி வேக வைத்து , நன்கு  மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வெல்லத்தில் சிறிது நீர் விட்டு சூடுபடுத்தி கரைந்தவுடன் வடிகட்டி, மசித்த பலாச்சுளையில் சேர்க்கவும். கொதிக்க ஆரம்பிக்கும் போது 

பச்சரிசிமாவையும், தேங்காய்ப் பாலையும் சேர்த்து கைவிடாமல் கிளறி நன்றாக சுருண்டு வரும்போது, நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்து போட்டு , ஏலப் பொடியைத் தூவி இறக்கவும்.

அவல்  பாயாசம்!!!

தேவையான பொருட்கள்:

நெய்யில் வறுத்த அவல் - 50கிராம்

நெய் - 2 ஸ்பூன் 

தண்ணீர் - 1/2 கப்

கெட்டியான பசும்பால் - 1 கப்

சர்க்கரை  - 2 தேக்கரண்டி 

முந்திரிப்பருப்பு - 4

ஏலப்பொடி - 1 சிட்டிகை

செய்முறை: 

வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் நெய்யை விட்டு அவலை போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வெந்ததும், பாலை ஊற்றி, சர்க்கரை சேர்த்து, வறுத்த முந்திரியை போட்டு கிறளி ஏலப்பொடியை சேர்த்து இறக்கவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com