Sweet Karam Batchanam Recipes 23
Sweet Karam Batchanam Recipes 23

குல்கந்து ஜாமுன் & பூண்டு முறுக்கு!

ஸ்வீட் காரம் பட்சணம் போட்டி பரிசு பெறும் ரெசிபிக்கள்!

குல்கந்து ஜாமுன்!

தேவையானவ: பிரட், குல்கந்து, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலக்காய் பொடி, எலுமிச்சை சாறு,  நெய்,  எண்ணெய்

செய்முறை:

1) ஒரு சூடான கடாயில் தண்ணீர் ஊற்றி அதனுடன் சர்க்கரையை சேர்க்கவும். பின்பு அதனை நன்றாக கொதிக்கவிட்டு சிறிது நேரம் கழித்து அதில் ஏலக்காய் பொடி, குங்குமப்பூ, துளியளவு எலுமிச்சை சாறு போன்றவற்றை அதனுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.இப்போது இனிப்பு பாகு தயார்.

2)  பிரட்டின் ஓரங்களை நீக்கி அதன் நடுப்பகுதியை மட்டும் பொடி செய்துகொண்டு அதனுடன் பால் சேர்க்கவும்.

3)  பின்பு அதனை மெதுவான மாவின் பதத்திற்கு நன்றாக பிசையவும். இப்போது அதனை உருண்டை பிடித்துக்கொள்ளவும். சுவையான ஜாமூன் உருண்டைகள் தயார்.

4)  இந்த உருண்டைகளுக்குள் சிறிதளவு குல்கந்து வைத்து மீண்டும் நன்கு உருட்டிக்கொள்ளவும்.

5)  சூடான எண்ணெய் அல்லது நெய்யில் குல்கந்து உருண்டைகளை பொன்னிறம் வருமளவிற்கு நன்கு பொரிக்கவும்.

6)  பொன்னிறமாக உருண்டைகள் பொரிந்தபின்பு அதனை தயாரித்து வைத்துள்ள இனிப்பு பாகில் அரை மணி நேரம் நன்கு ஊறவைக்கவும்.

7)  இப்போது எச்சில் ஊறும் சுவையான குல்கந்து ஜாமூன் சுவைப்பதற்கு தயார்.

இதையும் படியுங்கள்:
கேரட் மைசூர் பாக் & குட்டி கார முறுக்கு!
Sweet Karam Batchanam Recipes 23

பூண்டு முறுக்கு!

தேவையானவை: அரிசி மாவு, பூண்டு, பெருங்காயம், சீரகம், எள், வெண்ணெய், உப்பு, எண்ணெய்.

செய்முறை:

1) முதலில் பூண்டை விழுதுபோல் அரைத்துக்கொள்ளவும்.

2) ஓர் அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, பெருங்காயம், சீரகம், வெண்ணெய், எள் போன்றவற்றை சேர்த்து நன்கு கலக்கி முறுக்கு மாவை தயாரித்துகொள்ளவும்.

3) வெண்ணெய் நன்கு மாவுடன் கலந்தபின்பு அரைத்து வைத்துள்ள பூண்டு விழுதை சேர்த்து நன்கு கலக்கிகொள்ளவும்.

4) மாவுடன் தண்ணீர், சூடான எண்ணெய் சேர்த்து நன்கு மிருதுவாக பிசைந்துகொள்ளவும்.

5) ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கொதிக்கவிடவும். அதே நேரத்தில் தயாரித்து வைத்துள்ள முறுக்கு மாவை முறுக்கு குழலில் வைத்து விருப்பத்திற்கேற்ற வடிவத்தில் பிழிந்துவிடவும்.

6) பின்பு அதனை எடுத்து எண்ணெய்யில் பொரித்தது எடுத்தால், சுவையான பூண்டு முறுக்கு தயார்.

- அமிர்தவர்ஷினி

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com