கம்பி பதம் என்றால் என்னவென்று தெரியுமா?
புதிதாக பாகு காய்ச்சும் பொழுது கம்பி பதம் என்றால் என்னவென்று தெரியாமல் திண்டாடுவோம். அதற்கு இதோ ஒரு எளிய டிப்ஸ்.
பாகு காய்ச்சும் போது தீ ஒரே அளவாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். சில நேரம் அதிகமாகவும் சில நேரம் குறைவாகவும் இருந்தால் பாகின் பதம் கெட்டுவிடும். பாகு காய்ந்து கொண்டிருக்கும் போது இடைவிடாது ஒரு கரண்டியால் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பாகை கரண்டியால் தூக்கி ஊற்றினால் பாகு தொடர்ந்து எண்ணெய்போல, முக்கியமாக விளக்கெண்ணையை ஊற்றினால் எவ்விதம் கரண்டியில் இருந்து விழுமோ அவ்விதம் விழ வேண்டும். மற்றொரு நடைமுறையையும் கையாளலாம் .
"பாகைச் சிறு கரண்டியில் எடுத்து சிறிது ஆறிய பிறகு விரலில் தொட்டு எடுத்தால் தார் போன்று வரவேண்டும். இதை கம்பி பாகு என்று அழைப்பார்கள்". தரமான சர்க்கரை சுத்தமான நீரையும் சேர்த்து பாகு தயார் செய்யப்பட்டிருந்தால் பாகினை வடிகட்ட வேண்டும் என்று அவசியம் இல்லை. வடிகட்ட வேண்டும் என்று தோன்றினால் அதை பில்டர் அல்லது கதர் போன்ற தடித்த துணிகளில் வடிகட்டலாம். இப்படி பாகை காய்ச்சி பக்குவப்படுத்தி செய்யப்படும் பலகாரங்கள் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். ருசியும் மாறாது.