ஈஸியா செய்யலாம் மீல் மேக்கர் ராகி கோல்டன் பால்ஸ்!

ஈஸியா செய்யலாம் மீல் மேக்கர்  ராகி கோல்டன் பால்ஸ்!

ள்ளியில் இருந்து பசியுடன் வரும் குழந்தைகளுக்கு ஈசியாக செய்து தரக் கூடிய  ஒரு மாலை நேர ஸ்நாக்ஸ் இது.

தேவையான பொருட்கள்:

ராகி மாவு - 50 கிராம்

மீல் மேக்கர்-  100 கிராம்

கரம் மசாலா பொடி-  ஒரு ஸ்பூன்

மிளகாய் தூள்-  ஒரு ஸ்பூன்

உப்பு  - தேவையான அளவு

இஞ்சி பூண்டு பேஸ்ட்-  ஒரு ஸ்பூன்

 சின்ன வெங்காயம் – பத்து

 கொத்தமல்லி தழை – சிறிதளவு

கடலை எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

தண்ணீர்   - மூன்று டம்ளர்

செய்முறை:

சின்ன வெங்காயத்தை தோலுரித்து நறுக்கிக்கொள்ளவும். கொத்தமல்லி தழையை மண் போக நீரில் அலசி விட்டு பொடியாக நறுக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் மூன்று டம்ளர் நீரூற்றி, தண்ணீர் சூடானவுடன்,  மீல் மேக்கர் உருண்டைகளை அதில் போட்டு கொதிக்க விட்டு எடுக்கவும். ஒரு கரண்டியால் மீல்மேக்கரை தனியாக எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆறவிடவும். பின் அவற்றை தண்ணீர் போகப் பிழிந்து விட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் ராகி மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் மற்றும் கரம் மசாலாத்தூள், வெங்காயம், மல்லித்தழை, உப்பு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சற்றே கெட்டியாக பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிதளவு மாவு எடுத்து உள்ளங்கையில் வைத்து சிறு கோலிக்குண்டு அளவு உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

இப்போது சுவையான  மீல் மேக்கர்  ராகி கோல்டன் பால்ஸ் தயார். இதனுடன் தொட்டுக்கொள்ள டொமேட்டோ சாஸ் அல்லது தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com