குஜராத்தி ஸ்பெஷல் காந்த்வி!

Kandvi
Kandvi

குஜராத்தி காந்த்வி மிகவும் பிரபலமான குஜராத்தி ஸ்பெஷல் ரெசிபி ஆகும். இது மிகவும் சுவை மிகுந்த ஸ்நாக்ஸ் . இது எளிதில் எல்லாருக்கும் பிடிக்கக் கூடிய ஸ்நாக்ஸ் . இது பார்ப்பதற்கு அழகாகவும் மிருதுவாகவும் இருப்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். இதற்கு சைடிஸ் ஆக புதினா கொத்தமல்லி சட்னி அல்லது Tomoto கெட்ச் அப் சுவையாக இருக்கும். இந்த ஸ்நாக்ஸ் உங்கள் மாலை நேர தேநீர் வேளைக்கு அருமையானது.

தேவையான பொருட்கள்:

  • கடலை மாவு 1 கப்

  • சற்றே புளித்த தயிர் 1 கப்

  • தண்ணீர் 1.5 கப்

  • பச்சை மிளகாய் விழுது 1/2 ஸ்பூன்

  • பெருங்காயம் 1 பின்ச்

  • மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்

  • உப்பு 1/2 ஸ்பூன்

  • 2 அல்லது 3 பெரிய தட்டுகள்.

தாளிக்க :

  • எண்ணெய்

  • கடுகு,

  • வெள்ளை எள்ளு

  • பெருங்காயத்தூள்,

  • கறிவேப்பிலை

  • பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்

அலங்கரிக்க :

  • தேங்காய் துருவல்

  • கொத்தமல்லி தழை.

செய்முறை:

  • மேலே கொடுத்துள்ள பொருட்கள் எல்லாவற்றையும் ஒன்றாக தோசை மாவு போல கரைத்துக்கொள்ளவும்.

  • பெரிய தட்டுகளின் பின்புறம் எண்ணெய் தடவி பக்கத்தில் வைத்துக் கொள்ளவும்.

  • ஒரு கடாயில் கலந்து வைத்துள்ள கரைசலை கொட்டி அடுப்பில் வைத்து கிளறவும்.

  • அதிக நேரம் பிடிக்காமல் உடனேயே கெட்டியாகி பந்து போல வர ஆரம்பிக்கும்.

  • இப்போது அடுப்பை நிறுத்தி விட்டு,எண்ணெய் தடவி வைத்துள்ள தட்டுகளில் முடிந்த அளவு மெல்லியதாக கிளறிய மாவை பரப்பவும்.

  • எல்லா மாவையும் உடனுக்குடன் எல்லா தட்டுகளிலும் பரப்ப வேண்டும்.

  • இப்போது மாவில் கத்தியால் மெல்லியதாக கோடு போட்டு துண்டு போடவும்.

  • துண்டின் ஒரு முனையிலிருந்து சுருட்டிக் கொண்டே வந்து ஒவ்வொன்றாக அடுக்கவும்.

  • தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து கண்டவியின் மேல் கொட்டவும்.

  • மேலே தேங்காய் துருவல் மற்றும் கொத்தமல்லி தழை தாராளமாக தூவி அலங்கரிக்கவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com