குஜராத்தி ஸ்பெஷல் டெப்லா!

Tepla
Tepla

குஜராத்தி ஸ்பெஷல் டெப்லா

தேவையான பொருட்கள் :

  • கோதுமை மாவு 1 கப் கடலை மாவு 1 ஸ்பூன்.

  • சீரகம் 1 ஸ்பூன்

  • பச்சை மிளகாய் விழுது 1 ஸ்பூன்.

  • இஞ்சி பூண்டு விழுது (optional ) 1 ஸ்பூன்

  • வெள்ளை எள்ளு 1 ஸ்பூன்.

  • மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்.

  • மிளகாய் தூள் காரத்திற்கேற்ப.

  • தனியா தூள் 1/2 ஸ்பூன்.

  • சீரகத்தூள் 1/2 ஸ்பூன். பெருங்காயத்தூள் சிறிது.

  • சற்று புளித்த தயிர் மாவு பிசைய தேவையான அளவு

  • உப்பு தேவையான அளவு

  • துருவிய முள்ளங்கி ஒரு கப்.

  • வெந்தய இலைகள் விருப்பம் இருந்தால் சிறிது.

  • எண்ணெய் மாவு பிசைய தேவையான அளவு.

  • எண்ணெய் அல்லது நெய் செய்வதற்கு.

செய்முறை :

கொடுத்துள்ள பொருட்கள் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து தயிர் விட்டு கெட்டியான மாவாக பிசைந்து கொள்ளவும்.

உலர்ந்து போகாமல் இருக்க மேலே கொஞ்சம் எண்ணெய் தடவி வைக்கவும்.

தவாவை சுட வைத்து நெய் தடவி,பிசைந்த மாவை கையகல சப்பாத்திகளாக இட்டு வாட்டவும்.

இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி படிக்கவும்.

ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தால் நீண்ட நேரம் soft ஆக இருக்கும்.

தக்காளி தொக்கு,மாங்காய் தொக்கு போன்ற ஊறுகாய் வகைகளுடன் சாப்பிடலாம்.

பிரயாணங்களில் இரண்டு மூன்று நாட்களுக்கு எடுத்து செல்ல வேண்டும் எனில் நெய் விட்டு வாட்டவும்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com