மும்மருந்துக் குழம்பு
மும்மருந்துக் குழம்பு

சுவையான மும்மருந்துக் குழம்பு செய்வது எப்படி ?

ளி, இருமல், மூச்சுத் திணறல் போன்ற தொந்தரவுகளுக்கு இந்த சுக்கு, மிளகு, திப்பிலி குழம்பு நல்ல நிவாரணம் தரும்.  

தேவையான பொருட்கள் : 

1) தோல் சீவிய சுக்கு - சிறிய துண்டு 

2) மிளகு - ஒரு ஸ்பூன் 

3) அரிசி திப்பிலி - 4 

4) புளி - சிறிதளவு 

5) சின்ன வெங்காயம் - 10 

6) பூண்டு - 10 பல் 

7) வத்தக் குழம்பு பொடி - ஒரு ஸ்பூன் 

8) கறிவேப்பிலை - சிறிதளவு 

9) கடுகு, கடலைப் பருப்பு

10) வெந்தயம் - தாளிக்க  

11) மஞ்சள் தூள் - சிட்டிகை 

12) நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப 

செய்முறை :

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். புளியை கரைத்து கொள்ளவும். வெறும் வாணலியில் சுக்கு, மிளகு, அரிசி திப்பிலி சேர்த்து வறுத்து கொள்ளவும். 

ஆறிய பின் அதனுடன் 5 சின்ன வெங்காயம், 5 பூண்டு சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். 

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப் பருப்பு, வெந்தயம் சேர்த்து தாளித்து மீதமுள்ள வெங்காயம், உரித்த பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

பிறகு புளிக்கரைசல், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். 

புளி பச்சை வாசனை போன பிறகு அரைத்த விழுது, வத்த குழம்பு பொடி சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கெட்டியான பிறகு இறக்கி வைக்கவும்.

சுவையான ஆரோக்கியமான மும்மருந்துக் குழம்பு தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com