இட்லி மாவு கேக்!

இட்லி மாவு கேக்!

ன்னது இட்லி மாவுல கேக்கா? ஆச்சரியமாக இருக்கிறதா? செய்து பார்த்துட்டு சொல்லுங்க. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஏன் பெரியவர்களும் தான் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ஆரோக்கியமான கேக்கில் மைதா இல்லை சக்கரை இல்லை,சோடா உப்பு கூட இல்லை. இருப்பினும் சூப்பரான சுவையில் இருக்கும் இந்த கேக்கை எப்படி செய்வது என பார்க்கலாம்.

இட்லி மாவு கேக்:

ட்லி மாவு ஒரு கப், வெல்லம் ஒரு கப் , நான்கு ஸ்பூன்,  திராட்சை 10 , முந்திரி பருப்பு 10,  ரவை கால் கப்.

இட்லி மாவை அரைத்தவுடன் பயன்படுத்தாமல் நன்கு புளிக்க வைத்து (8 மணி நேரம்) பயன்படுத்தினால் ருசியாக இருக்கும். வெல்லத்தை கால் கப் நீர் விட்டு அடுப்பில் வைத்து கிளறவும். நன்கு கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும் வடிகட்டி எடுத்து வைக்கவும்.

வாணலியில் நெய் விட்டு முந்திரிப்பருப்பு, திராட்சையை வறுத்தெடுத்து விட்டு ரவையை சேர்த்து வறுக்கவும். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் இட்லி மாவு வறுத்த ரவை முந்திரி, திராட்சை, வடிகட்டிய வெல்ல நீர் சேர்த்து கலந்து விடவும். அடி அகலமான அதாவது தட்டையான பாத்திரத்தில் சிறிது வெண்ணெய் அல்லது நெய் விட்டு எல்லா பக்கங்களிலும் தடவி, கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி குக்கரின் அடியில் தேவையான அளவு நீர் விட்டு அது கொதிக்க ஆரம்பித்ததும் ஒரு ஸ்டாண்டை வைத்து இந்த மாவு கலவை பாத்திரத்தை வைத்து மூடி விடவும்.

அடுப்பை மிதமான தீயில் வைத்து 20 நிமிடங்கள் வேக விடவும். ருசியான கேக் ரெடி. பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு கொடுக்க சத்தான ஈவினிங் ஸ்நாக்ஸ் தயார்.

குறிப்பு : குழந்தைகளுக்கு பிடித்தமான டூட்டி ஃப்ரூட்டி கூட இதில் சேர்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com