ஹோட்டல் டேஸ்ட்டில் இட்லி ஃப்ரை & மஞ்சூரியன்!

Idly Fry.
Idly Fry.

லீவ்ல இருக்குற பிள்ளைகளுக்கு சாப்பிட விதவிதமா செஞ்சு தரணும்னு ஆசைப்படுவீங்க. அதுக்கு சரியான சாய்ஸ் இந்த இட்லி ஃப்ரை அண்ட் மஞ்சூரியன்தான். ஹோட்டலுக்கு போகாமலேயே மஞ்சூரியன் சாப்பிட்ட திருப்தி இந்த சிம்பிள் ரெசிபியிலேயே கிடைத்துவிடும். நாலு இட்லி இருந்தா போதும் நச்சென்று  பேரு வாங்கலாம்.

முதலில் இட்லி ஃப்ரை செய்ய தேவையான பொருட்கள்:

இட்லி - 4
இஞ்சி பூண்டு பேஸ்ட் - சிறிது
அரிசி மாவு - ஒரு கரண்டி
கடலை மாவு - ஒரு கரண்டி
மிளகாய் தூள் - தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
குறிப்பு - ஏற்கனவே இட்லியில் உப்பு இருக்கும் என்பதால் உப்பு குறைவாகவே போடலாம் மீதமான இட்லிகளை குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்து பின் கட் செய்தால் நன்றாக இருக்கும்.

செய்முறை:
இட்லிகளை எடுத்து சதுரமாக கட் செய்து கொள்ளவும். இதில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு கலந்து கறிவேப்பிலை தேவைப்பட்டால் பொடி பொடியாக அரிந்து போட்டு கலந்து சிறிது நேரம் ஊற விட்டு பின் பொரித்து எடுக்கலாம். நீர் அதிகம் தெளிக்கக்கூடாது. தேவைப்படுபவர்கள் கரம் மசாலாவை சேர்க்கலாம். இந்த டிஷ் குழந்தைகளுக்கு என்பதால் காரம் அதிகம் இல்லாமல் இருந்தால் நன்றாக மொறு மொறுவென்று இருக்கும்.

Manchurian.
Manchurian.

இட்லி மஞ்சூரியன் செய்ய தேவையான பொருட்கள்:
வெங்காயம் - இரண்டு
குடமிளகாய் - ஒன்று சிறியது
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
சில்லி சாஸ்  தக்காளி சாஸ் சோயா சாஸ்- தலா ஒரு சிறிய ஸ்பூன்
நறுக்கிய இஞ்சி பூண்டு - சிறிது
எண்ணெய் –தாளிக்க (முதலில் இட்லி ஃபிரை செய்த எண்ணெய் இருக்கலாம்).

இதையும் படியுங்கள்:
ஆன்மிகக் கதை: விடா முயற்சி!
Idly Fry.

செய்முறை:
முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், நறுக்கிய இஞ்சி பூண்டு சீரகம் சிறிது சேர்த்து வதக்கி, அதோடு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் குடைமிளகாயைப் போட்டு அரை பதத்திற்கு வதங்கியதும் பொறித்து வைத்துள்ள இட்லி பிரைகளைப்  போட்டு அதன் மீது சோயா சாஸ் சோயா சாஸ் தக்காளி சாஸ் தேவைப்பட்டால் முந்திரிகள் போடலாம். மேலே கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கலாம். வீட்டிலேயே செய்த சுகாதாரமான இட்லி மஞ்சூரியன் ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com