கொத்தவரங்காய் மோர் கூட்டு!

கொத்தவரங்காய் மோர்க் கூட்டு
கொத்தவரங்காய் மோர்க் கூட்டு

தேவையான பொருட்கள்:

கொத்தவரங்காய் – 100 கிராம்

தயிர் – ஒரு கப்

பச்சை மிளகாய் – ஒன்று

தேங்காய் துருவல் – 6 டீஸ்பூன்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - சிறிதளவு

பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

*கொத்தவரங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் அதில் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வேக விட்டு, வெந்தவுடன் தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்.

*பச்சை மிளகாய், தேங்காய் துருவல், சீரகம் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும் அதனுடன் தயிரை சேர்த்து கலக்கவும். பின்பு இதை நன்கு வேக வைத்து கொத்தவரங்காயில் சேர்த்து விடவும்.

*ஒரு கடாயில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி அதில் சிறிதளவு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, கொத்தவரங்காய் கலவையில் கொட்டி, அடுப்பில் வைத்து,

*கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு, ஒரு கொதிவிட்டு இறக்கவும். சுவையான கொத்தவரங்காய் மோர் கூட்டு ரெடி. இதை இட்டிலி, தோசை, சப்பாத்தி போன்றவற்றிக்கு ஏற்ற சுவையான சைட்டிஷ் இது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com