No tomato, tamarind. Delicious drumstick gravy.
No tomato, tamarind. Delicious drumstick gravy.

தக்காளி, புளி எதுவும் வேண்டாம். சுவையான முருங்கைக்காய் குழம்பு! 

ன்னதான் நாம் விதவிதமாக குழம்பு வகைகள் வைத்தாலும், முருங்கைக்காய் வைத்து செய்யப்படும் குழம்பின் சுவைக்கு எந்த குழம்பும் ஈடாகாது. இது முருங்கைக்காய் குழம்பின் ருசி தெரிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். இப்படி அதிக ருசியைக் கொடுக்கும் முருங்கைக்காயை வைத்து குறைந்த பொருட்களைப் பயன்படுத்தி எப்படி சுவையான குழம்பு வைக்கலாம் என்பது பற்றி இந்தப் பதிவில் காணலாம். 

இந்த சுவையான குழம்பு செய்ய முதலில் முருங்கைக்காயை நன்கு கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல மீடியம் சைஸில் இருக்கும் ஒரு மாங்காயை நான்கு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் கடாய் வைத்து நறுக்கிய மாங்காய், முருங்கைக்காய் இரண்டையும் சேர்த்து, அரை கப் தண்ணீர் ஊற்றி, சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் வரை வேக விடவும். 

அடுத்ததாக இந்தக் குழம்பிற்கான மசாலா தயாரிக்க வேண்டும். அதற்கு தேங்காய், சின்ன வெங்காயம், ஐந்து பல் பூண்டு, சிறிய துண்டு இஞ்சி, அரை ஸ்பூன் மிளகாய்த்தூள் அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதில் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மசாலாவை நன்கு பேஸ்ட் போல அறிந்துக் கொள்ளவும். 

இப்போது வேகவைத்த முருங்கைக்காய் மற்றும் மாங்காயில் அரைத்த மசாலாவை ஊற்றி மேலும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, சிறிதளவு உப்பு சேர்த்து வேக விடவும். குழம்பு பச்சை வாடை போகும் வரை கொதித்தால் போதும். அதன் பிறகு அடுப்பை நிறுத்தி விடுங்கள். இப்போது தயார் செய்த குழம்பை தாளிக்க வேண்டும். அதற்கு அடுப்பில் ஒரு கரண்டியை வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய், அது சூடானவுடன் வெந்தயம், கடுகு, கருவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்துக்கொள்ளுங்கள். லேசாக வெங்காயம் வதங்கிய பிறகு தாளிப்பை குழம்பில் ஊற்றி கலக்கி விடுங்கள். 

அவ்வளவுதான் சுவையான முருங்கைக்காய் மாங்காய் குழம்பு 15 நிமிடங்களில் தயார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com