ஊட்டச்சத்து மிக்க முட்டை!

ஊட்டச்சத்து மிக்க முட்டை!

கேக், பிஸ்கெட் அல்லது ஆம்லெட் போன்ற எந்தத் தயாரிப்புக்கும் முட்டையை உடைப்பதாக இருந்தால் சற்று வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டு வைத்திருந்து எடுத்து உடைத்து கிண்ணத்தில் ஊற்றினால் முட்டைக் கூட்டுக்குள் சிறிதளவு திரவம் கூட ஒட்டாமல் சுத்தமாக வந்துவிடும்.

கொதி தண்ணீரில் முட்டையை உடைத்து, ஊற்றி வேக வைக்கும்போது வெள்ளைக் கரு தனியாக சிதறி பரவிவிடாமல் மஞ்சள் கருவோடு ஒன்று சேர்ந்து வேக தண்ணீரோடு ஒரு டீஸ்பூன் சீமைக்காடியென்னும் வினிகரை சேர்க்க வேண்டும்.

வேகவைத்த முட்டையை வில்லைகளாக நறுக்கும்போது ஒவ்வொரு முறையும் கத்தியைத் தண்ணீரில் முக்கிக் கொண்டு நறுக்கினால் வில்லைகள் அழகாக வரும்.

வெள்ளைக் கருவை மட்டும் உபயோகித்துவிட்டு மஞ்சள் கரு மீந்து அதனை முட்டைக் கூட்டிலேயோ அல்லது ஒரு சிறு கிண்ணத்திலேயோ வைத்து ஃபிரிஜ்ஜில் பத்திரப்படுத்தும்போது அதன் மேல் இரண்டு டீஸ்பூன் ரிபைன்டு சமையல் எண்ணெயை ஊற்றி வைக்க வேண்டும். அதாவது, மஞ்சள் கரு எண்ணெயில் மூழ்கியிருக்குமாறு வைத்தால் கெடாமல் இருக்கும்.

வேக வைத்த முட்டைகளில் மஞ்சள் கருவுக்கு வெளிப் பாகத்தில் கரும்பச்சைப் பூச்சு படர்ந்திருப்பதைக் கவனித்திருப்பீர்கள். இது வெள்ளைக் கருவில் உள்ள கந்தகமும் மஞ்சள் கருவிலுள்ள இரும்பும்

லப்பதால் உண்டாகும் இரசாயன மாற்றமேயாகும். இதனைத் தடுக்க முட்டைகளை அதிக நேரம் வேக வைக்கக் கூடாது.  வெந்த முட்டைகளை உடனே சாதாரண தண்ணீரில் போட்டு எடுத்து  ஓட்டை அகற்ற வேண்டும் மிக மிதமான தீயில்தான் முட்டைகளை வேக வைக்க வேண்டும். முட்டைகளை தேவைக்கு அதிகமான நேரம் வேக வைப்பதால் கடினத் தன்மை யடையும்.

முட்டையின் வெள்ளைக் கருவிலுள்ள புரதச் சத்து ஒரு வரப்பிரசாதம் இந்த தனித்துவம் வாய்ந்த 'வெள்ளைக் கரு புரதச் சத்து' இன்புளுயன்ஸா வைரஸை எதிர்க்கும் தன்மையை உடலுக்குத் தருதோடு கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது. பச்சை முட்டையாக சாப்பிடுவதை விட அரைவேக்காட்டு முட்டைகளே ஆரோக்கியத்துக்கேற்றது.

முட்டையில் கலோரிச் சத்து மூன்று சதவீதமே யுள்ளதாலும், உடலுக்கு அன்றாடம் தேவைப்படும் மற்ற முக்கியமான சத்துக்கள் இதில் நிறைய இருப்பதாலும் உடல் மெலியும் டயட்டில் இருப்பவர்களும் ஒரு நாளைக்கு ஒரு முட்டை வீதம் சாப்பிடலாம்  என்று சத்துணவு விற்பன்னர்கள் கூறுகிறார்கள்.

முட்டையை சேமித்து வைக்கும்போது குறுகிய பாகம் கீழும், அகன்ற பாகம் மேலுமாக வைத்தால், முட்டை சீக்கிரம் கெடாது அதோடு. முட்டையை உடைக்கும்போது மஞ்சள் கருவும் கலங்கிப் போகாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com