பால் போண்டா
பால் போண்டா

பால் போண்டா - தேங்காய் பால் ஸ்பெஷல்!

தேவையான பொருட்கள்:

  • உளுந்து 2 கப்

  • பச்சரசி அரை கப்

  • தேங்காய் பால் மூன்று கப்

  • சர்க்கரை 1 கப்

  • ஏலக்காய் 3

  • உப்பு தேவையான அளவு

  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை:

உளுந்து மற்றும் பச்சரிசி இரண்டையும் ஒன்றாக இரண்டு மணி நேரம் ஊற வைத்து கிரைண்டரில் அல்லது மிக்ஸியில் தேவையான அளவு உப்பு சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். மாவை கையில் எடுத்து ஊதினால் காற்றில் பறக்க வேண்டும் . இதுவே அதற்கான பதம். வாணலியில் எண்ணெய் காயவைத்து சிறுசிறு போண்டாக்களாக போட்டு பொறித்து வைத்துக் கொள்ளவும்.

தேங்காய் - பால் - போண்டா
தேங்காய் - பால் - போண்டா


பிறகு அகண்ட பாத்திரத்தில் தேங்காய் பால் சேர்த்து அதில் ஒரு பின்ஞ் அளவு உப்பு சேர்க்கலாம் அது கூடுதல் சுவையை கூட்டும். பின்னர்  சர்க்கரை மற்றும் தட்டி வைத்த ஏலக்காய் சேர்த்து கலந்து வைக்கலாம். இதில் சூடாய் பொறித்த போண்டாக்களை சேர்த்து அரைமணி நேரம் ஊறவைத்து பரிமாறலாம். சுவையான தேங்காய் பால் போண்டா தயார்.

(உடனடியாக பரிமாற போண்டாவை கொதிக்கும் சுடுநீரில் இட்டு பின்னர் தேங்காய் பாலில் சேர்க்கலாம் அல்லது போண்டாக்களை ஊசியால் துளையிட்டும தேங்காய் பாலில் சேர்த்தால் அவை சீக்கிரம் ஊறிவிடும்)

குறிப்பு : தேங்காய் பாலில் சர்க்கரைக்கு பதில் கற்கண்டு,வெல்லம் , பனங்கற்கண்டு, நாட்டு சர்க்கரை சேர்த்தும் செய்யலாம்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com