
தேவையான பொருட்கள்:
பாலக்கீரை - 2 கட்டு
எண்ணெய் - தாளிக்க
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
பூண்டு - 6
பச்சை மிளகாய் - 4
வெங்காயம் - 1
பாசிப் பருப்பு - 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி, உளுத்தம் பருப்பு, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், பாசிப் பருப்பை சேர்த்து நன்கு வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், பாலக் கீரை, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சமைத்து இறக்கி சுவையுடன் சாப்பிடவும்.