பனீர் நெய் ரோஸ்ட்
பனீர் நெய் ரோஸ்ட்

பனீர் நெய் ரோஸ்ட்!

வறுக்க:

 • தனியா - 2 1/2 டேபிள் ஸ்பூன்

 • வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன்

 • மிளகு - 1 டேபிள் ஸ்பூன்

 • சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்

 • கடுகு சேர்த்து - 1 டேபிள் ஸ்பூன்

தேவையான பொருட்கள் :

 • காஷ்மீர் மிளகாய்- 12

 • தயிர் - 1 1/2 டேபிள் ஸ்பூன்

 • புளி - 100கிராம்

 • வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்

 • நெய் 5 ஸ்பூன்

 • பனீர் - 200 கிராம்

 • புளி - 100 கிராம்

புளிக்கரைசல் : 100 கிராம் புளியுடன் 200 தண்ணீர் சேர்த்து வைத்து கொள்ளவும்.

வாணெலியில் வறுக்க தேவையானதை ஒவ்வொன்றயும் தனித்தனியாக பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும். பின் அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

காஷ்மீர் மிளகாவை 1மணி நேரம் சூடு தண்ணிரில் போட்டு ஊற வைக்கவும். மிக்ஸி ஜாரில் ஊறவைத்த மிளகா, வறுத்த தனியா,வெந்தயம் , மிளகு ,சீரகம், கடுகு, 1 1/2 தயிர் , பாதி புளிக்கரைசல் மற்றும் வெல்லம் சேர்த்து அரைக்க வேண்டும். பின் அரைத்த பேஸ்டை தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

வாணெலியில் நெய்யை ஊற்றவும் நறுக்கி வைத்த பனீரை சேர்க்கவும் நன்றாக பிரட்டவும் பனீர் ரோஸ்டான பிறகு அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

வாணெலியில் கருவேப்பில்லை போட்டு நாம அரைத்து வைத்திருக்கும் பேஸ்டை அதில் கொட்டி நன்கு கிளற வேண்டும். தேவையான உப்பு சேர்த்து 3 ஸ்பூன் நெய் ஊற்றி நன்கு கிளறவும் 3,4 நிமிடம் கிளற வேண்டும். பின் அரை ஸ்பூன் தனியா தூள் , 1 கொத்து கொத்தமல்லியை சேர்க்கவும் அத்துடன் பனீர் சேர்த்து பொறுமையாக கிளற வேண்டும் கடைசியாக எலுமிச்சை பல சாற்றை அதன் மேல பிழிய வேண்டும். சுவையான பனீர் நெய் ரோஸ்ட் ரெடி

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com