பானி பூரிக்கு இத்தனை பெயர்களா?

பானி பூரிக்கு இத்தனை பெயர்களா?
Published on

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நம்மில் பலரும் விரும்பி உண்ணும் பானி பூரி ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு விதமான சுவை தருவதை போல் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப் படுகிறது.

இந்தியாவின் பிரபலமான தெரு உணவுகளில் பானி பூரிக்கு முதலிடத்தை தாராளமாக கொடுக்கலாம்.

இந்த உணவின் மிகவும் பொதுவான பெயர் பானி பூரி. இந்தியாவின் பல பகுதிகளில் குறிப்பாக வட இந்தியாவில் இந்த பெயர் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு மொறுமொறுப்பான சற்றுக் காரமான வெற்று பூரியில் சுவையூட்டப்பட்ட நீர், பல மசாலா பொருட்களுடன் வேகவைத்த பட்டாணி மசித்த உருளைக்கிழங்கு வெங்காயம் மற்றும் சட் மசாலா ஆகியவற்றால்  நிரப்பப்பட்டு வழங்கப்படுகிறது.

கோல் கப் என்பது வட இந்தியாவில் குறிப்பாக டெல்லி உத்திரபிரதேசம் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கிழக்கு இந்தியாவில் குறிப்பாக மேற்கு வங்காளம் பீகார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் இது புச்கா என அழைக்கப்படுகிறது.

ஒடிசாவின் சில பகுதிகளில் குப்சப்  அழைக்கின்றனர்..

பானி கே பட்டாஷே என்பது ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் பொதுவாக அழைக்கப்படும் பெயராக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com