பனீர் ஸ்பெஷல் கிரேவி!

பனீர் ஸ்பெஷல் கிரேவி!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

பொதுவாக பன்னீர் சாப்பிடுவது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாகும் . பன்னீரை பொரித்தோ அல்லது மசாலா செய்தோ சாப்பிட்டு வரலாம். எப்படி செய்தாலும் இது சுவை மிகுந்தது. இது எப்படி சுவை வாய்ந்ததோ அதைப் போல் சத்துக்களும் நிறைந்த ஒன்று. பொதுவாக பன்னீர் என்றாலே கால்சியமும், புரதச்சத்துக்களும் தான் நினைவுக்கு வரும்.

இதில் செலினியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இது மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. உங்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பை கட்டுப்படுத்த இதிலுள்ள பொட்டாசியம் உதவுகிறது. செலினியம் கருவுறாமை பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது. இதில் கால்சியம் அதிகளவு காணப்படுவதால் இது பற்கள் மட்டும் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது

தேவையான பொருட்கள்:

  • 100 கிராம் - பனீர்

  • 1 - வெங்காயம்

  • 1 - தக்காளி

  • 1 - பச்சைமிளகாய்

  • 1/4 டீஸ்பூன் - இஞ்சி பூண்டு விழுது

  • 1/2 டீஸ்பூன் - மிளகாய்தூள்

  • 1/4 - கசூரி மேத்தி

  • 1/4 டீஸ்பூன் - கரம் மசாலா

  • தேவையான அளவு - உப்பு

  • தேவையான அளவு - எண்ணெய்

செய்முறை:

1. பனீரை சிறிய துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் பொரித்து எடுத்து கொள்ளவும்.

2. பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் வதக்கி தக்காளி சேர்த்துமசியும் வரை வதக்கவும்.

3.பின்னர் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கிசிறுதீயில் வைத்து மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

4.பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் வற்றி கிரேவிகெட்டியானதும் கசூரி மேத்தி, கரம் மசாலா, வறுத்த பனீர் சேர்த்து 2 நிமிடம்வைத்திருந்து இறக்கி பரிமாறவும்.

logo
Kalki Online
kalkionline.com