கடலை மாவு ஊத்தப்பம்!
தேவை:
கடலை மாவு - 2 கப் வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
மிளகு, சீரகத்தூள் - தலா ஒரு ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
கடலை மாவை நீரில் உப்பு சேர்த்து கெட்டியாக கதைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி, எண்ணெயில் வதக்கி மாவில் சேர்க்கவும். தோசை கல்லில் மாலை ஊற்றி எண்ணெய் விட்டு வேக வைக்கவும். சிவந்ததும் மிளகு, சீரகக் பொடியை அதன் மேல் தூவினால் சுவையான கடலை மாவு ஊத்தப்பம் தயார்.
****
வாழைக்காய் குழம்பு!
தேவை:
வாழைக்காய்- 2
மிளகுத்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் - தலா 1 ஸ்பூன்
தேங்காய் துருவல்- 1 ஸ்பூன்
சோம்பு - அரை ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
பூண்டு - 3 பற்கள்

செய்முறை:
வாழைக்காய் தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கவும். வாழைக்காய் துண்டுகளை, அளவான நீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் மிளகு, சீரகத்தூள், அரைத்த விழுது சேர்த்து மிதமான தீயில் சில நிமிடங்கள் சூடாக்கி இறக்கி வைக்கவும். தொட்டுக்கொள்ள ஏற்ற டிஷ் இது.