பச்சடிகள் பலவிதம்!

பச்சடிகள் பலவிதம்!

'தொட்டுக்கொள்ள பச்சடி ஒரு சுவையான பதார்த்தம். சுவையான சில பச்சடிகளை பார்ப்போம்'

கேரட் துருவல், வெள்ளரிக்காய் துருவல் இவற்றை தயிரில் கலந்து, உப்பு சேர்த்து, கடுகு தாளித்தால் சுவையும், சத்தும் நிறைந்த பச்சடி தயார்.

பிஞ்சு வெண்டைக்காயை துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் வறுத்து, உப்பு கலந்த தயிரில் கலந்து, தாளித்தால் சுவை, மணம், சத்து கொண்ட பச்சடி கிடைக்கும்.

சின்ன ஜவ்வரிசியை எண்ணெயில் பொறித்து, பெயரில் போட்டு உப்பு, கொத்தமல்லி கலந்து தாளித்தால் சுவையான பச்சடி தயார்.

உளுத்தம் பருப்பை வறுத்து பொடித்து தயிரில் கலந்து உப்பு சேர்த்து தாளித்து விட்டால், சுவையும், மணமும் கொண்ட பச்சடி தயார்.

மாம்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, தயிரில் போட்டு உப்பு கலந்து தாளித்தால் சுவையான மாம்பழ பச்சடி ரெடி.

பரங்கிக்காயை நறுக்கி, வேகவைத்து தயிரில் போட்டு உப்பு கலந்து கடுகு பச்சை மிளகாய் தாளித்தால் சுவையான பச்சடி கிடைக்கும்.

எல்லா தயிர் பச்சடிகளிலும் கொத்தமல்லி தழை கருவேப்பிலை சேர்ப்பது சுவை மணத்தை கூட்டும் சத்தும் கூடும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி உப்பு கலந்த தயிரில் போட்டு தாளிக்கலாம்.

தயிர் அல்லது எலுமிச்சம் பழ சாறினையும் பச்சடிக்கு பயன்படுத்தலாம்.

காய்கறி பச்சடி செய்யும்போது நீர் கூடிவிட்டால் சில பிரட் துண்டுகளை வறுத்து அதில் போட்டால் அதிகப்படியான நீரைஉரிஞ்சுவிடும்.

பச்சடி செய்யும்போது உப்பை உடனே சேர்க்காமல், சாப்பிடும் முன் சேர்க்க வேண்டும். முதலிலேயே உப்பு சேர்த்தால், காய்கறிகளில் உள்ள சாறு வெளியேறி, சத்துக்கள் வீணாகிவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com