அழகிய அந்தமானைப் பாருங்கள் அழகு! அந்தமானில் பார்க்க வேண்டிய 10 கடற்கரைகள்!

அழகிய அந்தமானைப் பாருங்கள் அழகு! 
அந்தமானில் பார்க்க வேண்டிய 10 கடற்கரைகள்!

ந்தமானில் நிறைய கடற்கரைகள் சிறியதும் பெரியதுமாக உள்ளன. நாங்கள் ஆறு நாட்கள் அந்தமானுக்கு சுற்றுலா சென்றோம். Port Blair, Have lock Island, Neil Island, அந்தமானின் தலைநகரில் உள்ள வெற்றி மலை முருகன், அந்தமான் சிறைச்சாலை (Cellular Jail)  மற்றும் பல கடற்கரைகளுக்கு சென்று வந்தோம்.

அந்தமான் சிறந்த சுற்றுலா தலமாகும். தேன் நிலவு செல்ல ஏற்ற இடமும் கூட. அந்தமானில் நிறைய அற்புதமான பீச்சுகள் உள்ளன.

1. ராதா நகர் பீச்

து ஹேவ்லாக் தீவில் (Have lock) அமைந்துள்ளது. பிரிட்டிஷ் காலத்தில் ஆங்கிலேய தளபதியாக இருந்த ஹென்றி ஹவ்லாக் என்பவருடைய பெயரைத்தான் இந்த தீவிற்கு வைத்திருக்கிறார்கள். இந்த தீவிற்கு வந்துவிட்டால் கால்நடையாகவே பீச், கடைகள், சிறு குடில்களையும் நின்று நிதானமாக ரசித்துப் பார்க்கலாம். ரொம்ப ரம்மியமான இடம். ராதா நகர் கடற்கரையில் நின்று அதன் அழகை ரசிப்பதுடன் கடல் நீருக்கு அடியில் காணப்படும் பவளப் பாறைகளையும் கண்டு மகிழலாம். மலையும் அடர்ந்த மரங்களும் சூழ அதிக ஆழமற்ற கடல் இது. வெள்ளை மணல் கண்ணுக்கு விருந்து. இங்கு நிறைய குடில்கள், பெஞ்சுகள், மர நாற்காலிகள் போடப் பட்டுள்ளன. நன்கு குளித்து,  மர நிழல்களில் அமர்ந்து ஓய்வெடுத்து, ருசியான இளநீர், இஞ்சி டீ குடித்து ஷாப்பிங் பண்ண ஏற்ற இடம்.

2. நார்த் பே பீச்

நார்த் பே தீவில் உள்ள இந்த பீச்சில் கடலுக்கு அடியில் நடந்து சென்று ஆக்டோபஸ் கார்டனை பார்க்கலாம். வண்ணமயமான மீன்கள், பவளப்பாறைகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களை பார்க்க  முடியும். ஆசியாவிலேயே கடல் நடை பயிற்சிக்கு இந்த பீச் சிறந்த இடமாக உள்ளது. நீர் விளையாட்டுகள் விளையாட ஏற்ற இடம் இது பாதுகாப்பானதும் கூட.

3. காலா பதர் பீச்

து ஹேவ்லாக் தீவில் உள்ள மற்றுமொரு பீச். ரொம்ப சின்ன பீச்தான் ஆனா ரொம்ப அமைதியான இடம். இங்க சன் ரைஸும் , சன் செட்டும் பார்த்தோம். நீர் விளையாட்டுகள் ஜெட் ஸ்கை (jet sky ride) போனோம். நாங்கள் சென்றபோது இருட்டி விட்டது. அதனால் நிறைய போட்டோக்கள் எடுத்துக் கொண்டு ரூமிற்கு வந்து விட்டோம். காலையில் சன் ரைஸ் பார்த்துவிட்டு நீர் விளையாட்டுக்கள் விளையாடி சந்தோஷமாக போட்டோக்கள் நிறைய எடுத்துக்கொண்டோம். வெள்ளை மணல்,  பச்சை கலரில் கடல் நீர் பார்க்கவே அற்புதமாக இருந்தது.

4. யானை கடற்கரை

து ரொம்ப ஸ்பெஷலான பீச். இங்கு நிறைய வாட்டர் ஆக்டிவிட்டீஸ் இருக்கு. ஒரு காலத்துல இந்த தீவில் யானைகள் நிறைய இருந்ததாகவும் அவை கடற்கரையில் சுற்றி திரிந்ததால் இதற்கு எலபன்ட் பீச் என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஹேவ்லாகிலிருந்து அரை மணி நேரம் படகு மூலம் பயணம் செய்து இந்த இடத்தை அடைந்தோம்.Glass bottom boat மூலம் பவழப்பாறைகள், கடல் வாழ் உயிரினங்கள், விதவிதமான மீன் வகைகள், குக்கும்பர் ஃபிஷ் (cucumber fish) ஆகியவற்றை கண்டு களித்தோம். ஸ்கூபா டைவிங், டிராகன் சபாரி, ஸ்கூட்டர் ரைட், snorkeling போன்ற நீர் விளையாட்டுகளை விளையாடி அறைக்கு திரும்பினோம்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் ஸ்காட்லாந்து கூர்க்!
அழகிய அந்தமானைப் பாருங்கள் அழகு! 
அந்தமானில் பார்க்க வேண்டிய 10 கடற்கரைகள்!

5. விஜய் நகர் கடற்கரை

துவும் ஹேவ்லாக் தீவில் அமைந்துள்ள ஒரு கடற்கரை ஆகும் இங்கு சூரிய உதயத்தை கண்டு களித்தோம். நீச்சல் தெரிந்தவர்கள் நீச்சல் அடித்துக் கொண்டும் மற்றவர்கள் சூரியக் குளியலை அனுபவித்துக் கொண்டும் இருந்தோம். இயற்கை எழில் கொஞ்சும் இந்த இடத்தை நிச்சயம் பார்க்க வேண்டும். அமைதியான அழகு மிகுந்த இந்த கடற்கரையில் காலாற நடை பயணம் செய்ததும், பறவைகளை புகைப்படம் எடுத்ததும், சுடச்சுட இஞ்சி டீ குடித்ததும் மறக்க முடியாதவை.

6. நெயில் ஐலைன்ட்

Cruise Shipல ஹேவ்லாக்கிலிருந்து  நெயில் ஐலண்டுக்கு கிளம்பினோம். காத்தால 10:30-க்கு கிளம்பி 11.30 க்கு நெயில் ஐலைன்டு போனோம். இது தெற்கு அந்தமான் ல இருக்கு.

7. பரத்பூர் பீச்

7 கிலோமீட்டர் பரப்பளவு உள்ள இந்த சின்ன தீவுக்கு வந்து லஞ்ச் முடிச்சுட்டு ரெண்டு மணிக்கு பரத்பூர் பீச்சுக்கு போனோம். நாங்க தங்கி இருந்த ரிசார்ட்டுக்கு ரொம்ப பக்கத்துல இருந்ததுனால நடந்தே போனோம். அங்க glass bottom boatல போய் பவளப்பாறைகள், சில வகை மீன்களை கண்டு சிறிது நேரம்  கடற்கரையில் அமர்ந்து விட்டு மாலை 5 மணிக்கு எல்லாம் லக்ஷ்மன்பூர் பீச்சுக்கு கிளம்பி விட்டோம்.

8. லக்ஷ்மன்பூர் பீச்

சுற்றிப் பார்க்க ஏற்ற இடம். அந்தமானிலேயே சிறந்த இரண்டாவது கடற்கரையாக இந்த லக்ஷ்மன்பூர் பீச் தான் இடம் பிடிச்சிருக்கு. முதலில் ஹவ்லாக்கில் உள்ள ராதா நகர் பீச்சும், இரண்டாவதாக லக்ஷ்மன்பூர்  பீச்சும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வெள்ளை மணல், நீல நிற கடல், ஆரஞ்சு வண்ணத்தில் சூரிய அஸ்தமனம் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இந்த பீச்சில் ஒரு பக்கம் அடர்ந்த காடுகள் மற்றொரு பக்கம் கடல். காடுகளின் பக்கத்தில் நிறைய  பெஞ்சுகளும், குடிசைகளும் உள்ளன.  இங்கு சூரிய அஸ்தமனம் பார்ப்பதும், தெள்ளத் தெளிவாக உள்ள நீரில் குளிப்பதும் சுகமான அனுபவங்கள்.

9. லக்ஷ்மன்பூர் பீச்- 2

காலை 6.50 க்கு எல்லாம் இந்த பீச்சுக்கு போயாச்சு. நேரம் ஆக ஆக கடலின் தண்ணீர் உள்ளே வரும் என்பதால் காலையிலேயே சென்று விட்டோம். நீருக்கு அடியில் இருக்கும் காய்ந்த பவளப்பாறைகள் காலையில் நம் கண்களுக்கு அழகாக புலப்படும். நேரம் ஆக ஆக தண்ணீர் முன்னோக்கி வருவதால் இந்த பாறைகள் கண்ணுக்கு தெரியாது. பாறைகளில் நடந்து சென்று சிறிது தூரத்தில் உள்ள Natural Bridgeக்கு போனோம். ராட்சத பவளப் பாறைகளால் உருவாக்கப்பட்ட இந்த ஹௌரா பாலம் ரொம்ப பிரசித்தி பெற்றது. Lakshmanpur beach II is famous for its Natural Bridge for its dead corals and natural rocks.

10. சீதாப்பூர் கடற்கரை

இந்த கடற்கரை போர்ட் பிளேயரில் இருந்து 65 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த கடற்கரையில் சூரிய உதயத்தை பார்ப்பது மிகவும் பிரசித்தி பெற்றது. தங்க கலரில் மணலும், சூரிய அஸ்தமனத்தின் போது வானத்தின் நிறமும் ஒருசேர தங்க கலரில் ஜொலிப்பதை பார்க்க அற்புதமாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com