பொக்லைன் பொன்னம்பலம்!

பொக்லைன் பொன்னம்பலம்!

ஜோக்ஸ்!

"தலைவருக்கு எப்படி ' பொக்லைன் பொன்னம்பலம்'னு பேர் வந்திச்சு?"

"குழி பறிக்கிறதுல பயங்கர கில்லாடிங்க அவரு..!"

-வி. ரேவதி, தஞ்சை

********************

"அவர் டுபாகூர் சோதிடர்னு சொல்றீங்களே, எப்படி?"

"பையனுக்கு மூலம்னு சொன்னதும், 'அப்ப பெளத்திரம் உள்ள பொண்ணா பார்த்துதான் சேர்க்கணும்னு சொன்னாரே!"

-வி. ரேவதி, தஞ்சை

********************

''ரன்னிங்க்ல விழுந்து கால் உடைந்து போச்சு…''

''ஓட்டப் பந்தயமா?"

''இல்லைங்க வீட்ல பொண்டாட்டி அடிக்க வந்தப்ப ஓடுன பந்தயம்...''

- ஏ. நாகராஜன், பம்மல்

********************

''நான் விடுற குறட்டையால தூக்கம் கலையுதாம்..''

''யாருக்கு?"

''பக்கத்து சீட் கிளார்க்குக்குதான்...''

-ஏ. நாகராஜன், பம்மல்

********************

"வாக்குப்பதிவு இயந்திரத்துல கோளாறு இருக்குனு நீங்க சொன்னது உண்மைதான் போலிருக்கு தலைவரே..!'

"எதை வெச்சுய்யா சொல்றே..?"

"அங்கே பாருங்க.. நீங்க வெற்றி பெற்றதா ஃபிளாஷ் நியூஸ் ஓடிட்டிருக்கே..!"

- ஆர். பிரசன்னா

********************

"நம் மன்னர் தன்னை விட வயதில் இளையவர்களிடம் போர் புரிய மாட்டாராமே..?"

"ஆமாம். இளையோர் காலில் விழுவது அவ்வளவு நன்றாக இருக்காதாம்!"

- ஆர். பிரசன்னா.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com