என்னை எதுக்குய்யா சோதிக்கறாரு?

என்னை எதுக்குய்யா சோதிக்கறாரு?

ஜோக்ஸ்!

தேர்தல்ல தோத்துப்போனதுக்காக கவலைப்படாதீங்க, நீதியையும், நேர்மையையும் கடைப் பிடிப்பவரைத்தான் கடவுள் சோதிப்பாரு!

அப்புறம் என்னை எதுக்குய்யா சோதிக்கறாரு?

தலைவரே! உங்க பழைய வாழ்க்கையைப் பற்றி தேர்தல் வாரியத்துக்கு நல்லா தெரியும் போல!

எப்படிய்யா சொல்றே?

உங்களுக்கு துண்டு பிளேடை சின்னமா ஒதுக்கியிருக்காங்க!

******************

புலவரே! உமக்கு என்ன துணிச்சல், என் முன்னால நிதி அமைச்சரை புகழ்ந்து பாடுகிறீரே?

மன்னிக்கணும் மன்னா, காஜானாவின் சாவி அவரிடமல்லவா இருக்கு!

******************

எதுக்கு டாக்டர் ஆபரேஷனுக்கு முன்னால இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கச் சொல்றீங்க?

நீங்க இல்லாம உங்க மனைவியும், குழந்தைகளும் கஷ்டப்படக்கூடாதேன்னு தான்!

தலைவரே! மக்களுக்கு நல்லது செய்யணும்னு தான் அரசியலுக்கு வந்தீங்களா?

அதிலென்ன சந்தேகம், மூத்தவன் நகைக்கடை வச்சிருக்கான், இளையவன் ஜவுளிக்கடை நடத்தறான்.

******************

ஏன்யா நேத்து ஒரு புதுக்கட்சி ஆரம்பிச்சிருக் காங்களாமே?

அது ஊழலுக்கு எதிரா போராடுர கட்சி தலைவரே, உங்களுக்கு ஒத்து வராது...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com