சீடைகள் கற்றுத் தந்த வாழ்க்கை பாடங்கள்!

சீடைகள் கற்றுத் தந்த வாழ்க்கை பாடங்கள்!

ஓவியம்; பிரபுராம்

க்ருஷ்ண ஜெயந்தி வந்தாலே கலாவுக்கு இலவச இணைப்பாக வந்து விட்டும் டென்ஷன். சீடைகளை கஷ்டப்பட்டு உருட்டி அதை எண்ணெயில் போடும் போது ஒரு ஃப்ளாஷ் பேக் முதலில் மனதில் ஒடும். அது இரண்டு வருடங்களுக்கு முன்னால் செய்த சீடையின் சேஷ்டை தான். எண்ணெயில் போட்ட சீடைகள் டமால் டுமீல் என வெடித்து பக்கத்து வீட்டு உஷா ஓடி வந்து” என்ன கலா உனக்கு மட்டும் தீபாவளி ரொம்ப அட்வான்ஸ்டா வந்தாச்சா?” என நக்கலாக கேட்ட கமென்ட் காதில் ரீங்காரமிட்டு கொண்டே இருக்கும். சீடை வெடிக்காம இருக்கணுமே என பயந்து நடுங்கி, அப்பாடா என சீடைகளை வெளியில் எடுத்து விட்டால் அதுவே பெரிய சாதனையாக மனசில் சப்பணமிட்டு கொள்ளும்.

செல்ல கண்ணா வெடிக்காமல் சீடையை எண்ணையிலிருந்து எடுத்து கொடுத்து விடு ப்ளீஸ் என கண் மூடி இரு கை கூப்பி நின்றவளை வேடிக்கையாக பார்த்தாள் கலிஃபோர்னியாவிலிருந்து வந்திருந்த கலாவின் தங்கை காவ்யா. “ ஹே கலா இது என்ன புது பழக்கம்? சீடை செய்யறதுக்கு முன்னாடியே கண் மூடி இவ்ளோ பக்தி ச்ரத்தையா சீடைகள் செய்யறியே” என கேட்டவளை முறைத்து பார்த்து, “என் கஷ்டம் எனக்கு” என அவளிடம் ஃப்ளாஷ் பேக் கதையை பகிர்ந்தவளை பார்த்து காவ்யா, “ சீரியஸ்லி இதுக்கா இவ்ளோ ஃபீல் பண்ற? ஒண்ணு நல்லா தெரிஞ்சுக்கோ கலா . நமக்கு

தெரிஞ்சோ தெரியாமலோ நம்மள சுத்தி எப்பவுமே பாசிட்டிவ் எனர்ஜியும் நெகட்டிவ் எனர்ஜியும் இருந்துக்கிட்டே தான் இருக்கும். நமக்கு எது நடக்க கூடாது, எது வேண்டாம்னு நினைக்கறோமோ அத பத்தியே நினைச்சுக்கிட்டு இருந்தோம்னா நெகட்டிவ் எனர்ஜிய தான் நாம கொண்டு வருவோம். எது நடக்க கூடாதுன்னு நினைச்சேன்னோ ச்சே அதுவே நடந்து போச்சே என் ராசியே இப்படி தான்னு உடனே ஒரு self blaming mode க்கு போக ஆரம்பிச்சிடுவோம். இப்போ இந்த சீடை விஷயத்தை எடுத்துப்போமே.. சீடை வெடிக்க கூடாதுன்னு நினைக்கறத விட சீடை நல்ல படியா வரணுமே, சீடை நல்ல படியே நிச்சயம் வரும்ன்னு நினைச்சுக்கிட்டே நீ சீடைய உருட்டினாலும் சரி, அப்படியே அதே திங்கிங்கோட நீ சீடைகள எண்ணெய்ல போடும் போதும் சரி, பாசிட்டிவ் எனர்ஜிய attract பண்ணுவ கலா.

உன்னோட day to day life ல கூட இப்படி எல்லாத்தையுமே கொஞ்சம் பாசிட்டிவா சொல்லி பார்த்து பழக ஆரம்பியேன். வாழ்க்கையே எவ்ளோ colourful and cheerful ஆயிடும் தெரியுமா? என்னடா இவ ரொம்ப பேசறாளே..அமெரிக்கால life coach அது இதுன்னு பாடம் நடத்திட்டு நம்ம கிட்டேயும் அந்த அலட்டல காட்றாளேன்னு நினைக்காத கலா ப்ளீஸ். உன் வேலையை நீ full dedication ஓட செய் அவ்ளோ தான் மத்தவங்க கமெண்ட்ஸ் , criticism இதெல்லாத்தையும் லைட்டா எடுத்துக்க பழகிக்கோ. Running race ல ஓடறவங்கள பாரு. அவங்கள சுத்தி எல்லாருமே அவங்க ஜெயிக்கனும்னா க்ளாப்

பண்ணுவாங்க? சான்ஸே இல்ல… ஓடறவங்களோட கவனம் நம்மள எல்லாரும் பாராட்டறாங்களா நாம ஜெயிக்கனும்னு எல்லாரும் ஆச பட்றாங்களான்னு எல்லாம் இருக்கவே இருக்காது. அதோ தெரியற goal post ஐ நான் ஓடி போய் first ரீச் பண்ணனும் அப்படீன்னு மட்டுமே தான் அவங்க நினச்சுப்பாங்க இல்லயா? இதே தான் உன் சமையலுக்கும் … எல்லாரும் பாராட்டணும் நம்ம சமயல அப்படீன்னு நினைச்சுக்கிட்டு நீ சமையல் பண்ணினா sometimes appreciation கிடைக்கலாம்.. பல நேரம் ஒண்ணுமே கிடைக்காமலேயே போகலாம். உன்னோட கோல் போஸ்ட் நல்லா சுவையா சமைக்கணும் அவ்ளோ தான். பாராட்டு கிடைச்சா ஓகே கிடைக்கலேன்னாலும் டபுள் ஓ கேன்னு எடுத்துக்க ஆரம்பி கலா” என சொன்ன காவ்யாவை , அவள் ரூபத்தில் மாயக்கண்ணன் தான் வந்து விட்டானோ என வியப்பு மாறாமல் பார்த்தபடியே மனதிற்குள் அவளை பாராட்டிய படியே சென்றாள் கலா…

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com