'என்னுடன் வந்த மங்கை’

'என்னுடன் வந்த மங்கை’

Published on

ருவான நாள் முதலாய் எனக்கும் மங்கையர் மலருக்கும் தொப்புள் கொடி உறவுபோல் இன்று வரை தொடர்கிறது. டிப்ஸ் தொடங்கி கதை வரை சகல பகுதிகளிலும் எனக்கு அவள் இடம் கொடுத்துள்ளாள். மகிழ்ச்சி. புடவைகள், குக்கர், ஊறுகாய், பெட் பாட்டில் இன்னும் பல பரிசுகள் தந்து மெர்சலாக்கியுள்ளாள். 

      மங்கையிடம், எனக்குப் பிடித்த விஷயம் அட்ராசிட்டி அன்புவட்டம்தேன். கேனத்தனமான கேள்விகளுக்கு காமெடியா பதில் சொல்லுவாள். வில்லத்தனமா கேட்டா விவேகமாக பதிலடி தருவாள். ஜி.கே. கொஸ்டின் கேட்டாலும், விவரமான பதில் கிடைக்கும். ஆனா, இப்போ அந்த வட்டம் காணாமப் போயிட்டுது.

           வாசகிகளின் சந்தேகங்களை சலிக்காமல் தீர்த்து வைத்த என்சைக்ளோப்பீடியா அனு மேடம் உங்களை ரொம்பவே மிஸ் பண்ணுறேன்... விரைந்து வந்து அன்பு வட்டத்தில் தலைகாட்டுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com