நவீன நவராத்திரி!

Modern Navarathiri
Modern Navarathiri
Published on
nalam tharum Navarathiri
nalam tharum Navarathiri

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

Navarathiri
Navarathiri

- கே.எஸ். கிருஷ்ணவேணி

பிரம்மாண்டமாக தீம் அமைத்து கொலு வைக்கிறார்கள். அதுவும் இந்த வருடம் சந்திராயன் தீம் வைப்பது தான் நவராத்திரியின் ஹைலைட்டாக இருக்கப் போகிறது. வளரும் கலைஞர்களை அழைத்து வீட்டிற்குள்ளேயே மொட்டை மாடியிலோ, ஹாலிலோ காதுக்கு இனிமையாக கச்சேரி அல்லது பஜன் வைப்பதும், பஜன் வைப்பதும், போட்டோ பூத் (Photo Booth) வைப்பதும் பார்க்க வித்தியாசமாகத்தான் உள்ளது. வருகிறவர்களுக்கு பழைய கால (Snacks) ஸ்னாக்ஸ் இலை அடை, சுருள் போளி, கந்தர் அப்பம் என பரிமாறி ஸ்மார்ட் டிவியில் பென் டிரைவ் மூலம் அதை எப்படி சமைப்பது என ப்ளே பண்ணுவதும் நவீன நவராத்திரியின் உச்சம். அழைப்பின் பேரில் வருபவர்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து குளோபல் வார்மிங் என்ற பெயரில் செடிகளை பரிசாக கொடுப்பதும் வரவேற்கத்தக்கதாகும்.

- ஜெயா சம்பத்

முன்பெல்லாம்  வெற்றிலை, பாக்கு, பழம் மற்றும் தினமும் ஒவ்வொரு வகை சுண்டல் தான் கொலு பார்க்க வருபவர்களுக்குத் தருவார்கள். (அதனால் புரோட்டீன் சத்து கிடைத்தது) இப்போது சுண்டல் தருகிறார்களோ இல்லையோ கண்டிப்பா கிப்ட் ஒன்று தரும் வழக்கம் வந்து விட்டது. இதற்காக கடை கடையா ஏறி இறங்கி... புது விதமான கிப்ட் வாங்க வேண்டி உள்ளது.

அந்தக் காலத்தில்,  சின்னக் குழந்தைகளுக்கு ராதை, கிருஷ்ணன் என்று அழகாக டிரஸ் பண்ணி, வீடு வீடாகச் சென்று, "மாமி...எங்காத்துல கொலு வச்சுருக்கோம். வெற்றிலை பாக்கு வாங்கிக்க வாங்கோ என்று குங்குமச் சிமிழை நீட்டி மழலையில் அவர்கள் கூப்பிடும் அழகே அழகு..."

நவீன நவராத்திரியில் அது மிஸ்ஸிங்.

- என்.கோமதி

வராத்திரி பிரசாதம் என்றாலே சுண்டல் தான் அன்று. நியூஸ் பேப்பரில் பொட்டலமாக்கி தருவர். அதுவே, பாலிதீன் கவர்களுக்கு மாறி, பின் சிப் லாக் கவரில் தஞ்சமடைந்தது. அப்புறம் பேப்பர் கப்பில் வழங்கப்பட்டது. 

சென்ற வருடம், டிஸ்போஸபிள் டப்பாவில், லட்டு அல்லது மைசூபாகு என பிரசாதம் பரிணாம மாற்றம் பெற்றது.

ஆக மொத்தத்தில் பழைய நவராத்திரியில் இருந்த மகிழ்ச்சி, ஒற்றுமை எல்லாம் குறைந்து போய்... "நவீன நவராத்திரி" யில் ஆடம்பரம் மட்டுமே மேலோங்கி நிற்பது போல் உள்ளது!

- பி. மஹதி

வீட்டிலேயே வித விதமான சுண்டல்கள், இனிப்பு பட்சணங்கள், கலவை சாதங்கள் செய்து நவராத்திரி நாயகியருக்கு நைவேத்தியம் செய்துவிட்டு கொலு பார்க்க வருபவர்களுக்கு விநியோகம் செய்வோம் முன்பு. இப்போது என்ன சுண்டல், எவ்வளவு தேவையோ ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீடு தேடி அவை வந்து விடுகின்றன.

- ஆர். பத்மப்ரியா

முன்பெல்லாம் பாட்டி அம்மா காலத்தில் அவர்களே தங்கள் கற்பனை திறனை பயன்படுத்தி கைத்திறமையால் கொலுப்படிகள் அமைத்து, பொம்மைகளுக்கு அலங்காரம் செய்து, சில சமயங்களில் பொம்மைகளும் செய்து, படிகளில் அடுக்குவார்கள். இப்போது அதற்கென்றே பயிற்சி பெற்றவர்கள் வீட்டுக்கு வந்து இன்டீரியர் டெக்கரேஷன் போல கொலுப்படி அமைத்து, பொம்மைகள் அடுக்கி அதற்கான கட்டணத்தை பெற்றுக் கொள்கிறார்கள்.

- ஆர். கீதா

ப்போது வீட்டில் கொலு வைப்பவர்கள் எப்போதும் சொந்தக்காரர்கள், தெரிந்தவர்களை கொலு பார்க்க அழைப்பதோடு வீட்டுப்பக்கத்தில் வசிக்கும் முதியோர்களையும், முதியோர் இல்லத்தில் வசிப்பவர் களையும் கொலு பார்க்க அழைக்கிறார்கள். இது அந்த முதியவர்களுக்கு தங்களை உறவினர்கள் போல்

நேசிப்பவர்களும் இந்த உலகில் இருக்கிறார்கள் என்ற சந்தோஷத்தை கொடுக்கிறது. அதுபோல் கொலு பார்க்க வருபவர்களுக்கு பயன்படும் கற்கண்டு, திராட்சை, பேரிச்சம் பழ பாக்கெட்டையும் சுண்டல், வெற்றிலை பாக்குடன் வைத்துக் கொடுக்கிறார்கள்!

- நளினி ராமச்சந்திரன்

முன்பெல்லாம் தாத்தா பாட்டி வழிவழியாய் நமக்கு தந்த பொம்மைகள் தான் கொலுப்படியில் வீற்றிருக்கும். ஆனால் தற்போது "தீம்" கொலுவிற்கு இருக்கும் மதிப்பு மற்றவைக்கு இருப்பதில்லை. அதிலும் கொலுப்போட்டி என்றால் கேட்கவே வேண்டாம்.வீடே அமர்களப்படும். அடுத்து நவராத்திரிக்கு தாம்பூலம் கொடுப்பதிலும் நவீனம் தான் "நம்பர் ஒன்" னாக திகழ்கிறது. பாரம்பரிய தாம்பூலம் என்பதன் முக்கியத்துவம் குறைந்து "காஸ்ட்லி கிஃப்ட்" கொடுப்பது நவீனமாகிவிட்டது. கொலுபார்க்க செல்கிறோமோ இல்லையோ இந்த ‘கிஃப்ட்’  வாங்க யாரும் தவறுவதில்லை. இந்த நவீன யுகத்தில் நவீன நவராத்திரி என்ற பெயரில் ஒரு சிலர் கார் டிக்கியில் கொலு பொம்மைகளை வைத்திருப்பதை வாட்ஸ் ஆப்பில் பார்த்தபோது மனம் வலிக்கிறது.

நவீனமயமாவதற்கும் ஓர் அளவு உண்டுதானே?

- ஆர் ஜெயலட்சுமி

கொலுவில் செட்டியார் கடை நவீனமாக செல்போன் கம்ப்யூட்டர் லேப்டாப் விற்கும் கடையாக மாறும்.

கொலுவை பார்க்க வருபவர்களிடம் மெகாதொடர் பற்றி பேசாமல் மங்கையர் மலர் ஆன்லைனில், நவீன நவராத்திரி போட்டி வைப்பது  படித்தாயா பற்றி பேசுவார்கள்.

- ஆர். பிரசன்னா

ன்று கொலுவின் முன்பு பெண் குழந்தைகள் பாடினர். இன்று பென் டிரைவ் பாடுகிறது.

அன்று ஆவி பறக்கும் பட்சணங்கள் நைவேத்தியம் செய்யப் பட்டது. இன்று ஆன்லைன் ஆர்டர் பட்சணங்கள் நைவேத்தியம் செய்யப் படுகிறது.

அன்று கொலு வைத்த வீடுகளில் அம்மன் பாடல்கள் ஒலிக்கும். இன்று அனிருத் பாடல்கள் அலறுகிறது.

- v. ஸ்ரீவித்யா பிரசாத்

1. வாட்ஸ் ஆப் ல் அழைப்பிதழை வடிவமைத்து நம் வீட்டு கொலுவை ஓவர் லுக் செய்து அழைக்க முடிகிறது.


2. நாம் எந்தெந்த நாட்களில் எந்த வீட்டிற்கு செல்கிறோம், நமக்கு முடியும் நாட்கள் என்னென்ன, எந்த டீமுடன் சேர்ந்து கொலுவிற்கு செல்ல இருக்கிறோம், என்பதையும் அப்டேட் செய்து, விடுவதால், தாம்பூலம் வாங்க வந்து ஆள் இல்லாமல் ஏமாறுவது இப்போது இல்லை.

இதையும் படியுங்கள்:
நவராத்திரியில் எந்த மாதிரி கோலங்கள் போட வேண்டும்?
Modern Navarathiri

3. கொலுவிற்கு தாம்பூலம் வைக்க, கைவினைஞர்கள் மற்றும் கைவேலைப்பாடுகள் கூடிய பரிசுப்பொருட்கள், மொத்தமாக வாங்க ஒரு மாதம் முன்பே திட்டமிட்டு ஒரு குழுவாக ஓரிடத்தில் கூடி சென்று, வாங்கி விடுகிறோம். இதனால் பணவிரயம் தவிர்க்கப்படுகிறது.


4. தேனும் புதிய பொம்மை வாங்க, ஒரு பெரிய டீமே சேர்ந்து கிளம்பி, வாட்ஸப்பில், அந்தந்த கடையின் போன் நம்பர் வாங்கி, விலை மலிவாக பேரம் பேசி வாங்கி வரும் நிகழ்வு ஒரு சுற்றுலா செல்வது போல் இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com