சோறு - இதில் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா...?

சோறு - இதில் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா...?

ந்தியர்களின் பெரும்பான்மையான உணவு அரிசி சோறுதான். நம்ம அரிசி சாதத்துக்குனு நிறைய ஆரோக்கிய பலன்கள் இருக்கு. அரிசியில் உள்ள முக்கியமான எட்டு அமினோ அமிலங்களே உலகின் பாதி பேர் அரிசி உணவை முக்கிய உணவாக கருதுவதற்கு காரணமாக இருக்கிறது.

அதே நேரத்துல சோற எப்படி சாப்பிடக் கூடாதுன்னும் சொல்லியிருக்காங்க. அரைகுறை வேக்காட்டுல வெந்துருக்குற அரிசி சாதத்த சாப்பிடவே கூடாதாம். அதனால் செரிமான பிரச்சனை, மலச்சிக்கல், சிறுநீர் வெளியேறுவதுல சிக்கல் போன்ற பல தொல்லைகள் ஏற்படுமாம். அதேபோல அதிகமான சூட்டோட இருக்குற சாதத்த சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டா ரத்தத்தில் பித்தம் அதிகரிப்பது, அதிக தாகம், மயக்கம் உண்டாகும். தொப்பையும் உண்டாகும்!

மிதமான சூட்டுல, சீரா வெந்திருக்குற சாதத்த சாப்பிடணும். அப்படி சாப்பிடும்போது வாத, பித்த, கபம் ஆகிய பிரச்னைகள் நீங்கி, உடலுக்கு நன்மை உண்டாகும். குறைந்த தண்ணீரில் குறிப்பிட்ட நேரத்துக்கு மிகாமல் வடித்து இறக்கினால் அரிசி சோறு மந்திர சக்தி வாய்ந்த மருந்துபோல் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

வெள்ளை அரிசி உயர் கிளைசெமிக் குறியீடு மற்றும் குறைந்த நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டதால் அதை அளவாக பயன்படுத்த கூறுவர். ஆனால் அமெரிக்க கெமிக்கல் சொசைட்டி ஆய்வுப்படி, ஒரு கரண்டி தேங்காய் எண்ணெய்யுடன் அரிசியை நல்ல அளவு தண்ணீரில் கலந்து, 30-40 நிமிடங்கள் அரிசியை வேகவைத்து, பின் அதை வடிகட்டி, பிரிட்ஜ்யில்  வைத்து 12 மணி நேரம் கழித்து அதை வெளியே எடுத்து சாப்பிட அதன் கலோரி 60 சதவீதம் குறையும் என்கிறார்கள்!

பழைய சோறு உணவில் உள்ள லாக்டிக் அமிலம் பாக்டீரியா, அரிசியில் உள்ள ஊட்டச்சத்து எதிர்ப்பு காரணிகளை உடைக்கிறது. இதன் விளைவாக ஆரோக்கியமான நுண்ணூட்டச் சத்துக்கள் மற்றும் தாதுக்களான இரும்பு, பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஆகியவற்றின் மேம்பட்ட இருப்பு தன்மையை பல ஆயிரம் சதவீத புள்ளிகள் அதிகரிக்கிறது. உதாரணமாக, 100 கிராம் அரிசியை 12 மணிநேரம் நொதித்த பிறகு, இரும்புச்சத்து 3.3 மில்லிகிராமில் இருந்து 73.91 மில்லிகிராமாக கூடியது. அதனால்தான் பழைய சோறு பலன்கள் சுகாதார நிபுணர்களால் மிகச் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

பச்சரிசி சாதம் சாப்பிட்டால் தாதுவை பலப்படுத்தும். பித்தம் தணியும்; சிறுநீர் எரிச்சல் நீங்கும். குழந்தை களுக்கு பச்சரிசி சாதம் மந்தம் உண்டாக்குவதால கொடுக்கக்கூடாது!  

பொங்கல் என்பது அரிசி மற்றும் பச்சைப்பருப்பின் கலவையாகும். இந்த உணவு கார்போ - புரதம் சமநிலையை உறுதி செய்கிறது. பொங்கல் எளிதில் ஜீரணமாகக்கூடிய ஒரு உணவாகும். இதில் கொழுப்பு மற்றும் கலோரி குறைவாக உள்ளது.

சோறும் நெய்யும் கலந்து சாப்பிட்டா கண்ணுக்கு குளிர்ச்சி உண்டாவதோட நல்ல ஜீரணமும் நடக்கும்; பித்த நோய்களும் நீங்கும். மூளையின் ஆற்றலையும் அதிகரிக்கும்.

நெய் கலந்த பருப்பு சோறு: சதை வளர்ச்சி ஏற்படும், நினைவாற்றலை அதிகரிக்கும், உடல் வனப்பு உண்டாகும், கண்ஒளி  அதிகரிக்கும், மலக்கட்டை, குடல் வலி, பித்தம், சொறி சிரங்கு ஆகியவை நீங்கும்.

கூட்டாஞ்சோறு: புழுங்கல் அரிசியுடன் பலவிதமான காய்கறிகள் சேர்த்து சமைக்கும் கதம்ப உணவு. உடலுக்கு வலிமையூட்டும், மனதில் உற்சாகம் ஏற்படுத்தும், உணவுக்கு பின் மோர் சாதம் இஞ்சித்துவையல் சேர்த்து சாப்பிடுவது நல்லது.              

பால் சோறு சாப்பிடுவது தாகத்தை தணிக்கும், தாதுவை பலப்படுத்தும். நல்லெண்ணெய் சாதம் உடலுக்கு வலுவை தருவதுடன், தாம்பத்திய உறவிற்கும் பலம் சேர்க்கும்.

தயிர், மோர் சாதம்: உணவு எளிதாக செரிமானம் ஆகும். ஜுரன மண்டலத்தின் பி.எச் தன்மையை சமநிலையில் வைக்க உதவுகிறது. பித்தம், தாகம், மேக நீர், களைப்பு நீங்கும்.

அன்னப்பால் கஞ்சி: இது புழுங்கல் அரிசிக்கஞ்சி. காய்ச்சல் கண்டு நலிவுற்ற உடலுக்கு களைப்பை நீக்கி வலுவாக இருக்க வழங்கப்படும் சோறு. இது உடற்சூட்டைத் தணிக்கும்

அரிசி அவல் உணவு: நீரில் அவலை ஊறவைத்து உண்டால் தாகம், களைப்பு, பசியின்மை, மயக்கம் நீங்கும்.

பிரியாணி அல்லது கறிச்சோறு: உடல் வலுவையும், தாது விருத்தியை தரும். அளவுக்கு அதிகமாக  எடுத்துக்கொண்டால் பசி மந்தம் ஏற்படும். பிரியாணி குளிர் காலத்திற்கு ஏற்ற உணவு. காரணம் இதில் சேரும் பட்டை, கிராம்பு, இஞ்சி, மஞ்சள் போன்ற மசாலா அயிட்டங்கள் இவை குளிர் காலத்தில் உடலை கதகதப்பாக வைக்க உதவும். சளி, இருமல், அஜிரணக்கோளாறு மற்றும் ரத்த ஓட்ட குறைபாடு களையும் குளிர் காலத்தில் சரிசெய்யும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com