நன்மைகள் பயக்கும் நார்த்தங்காய்!

நார்த்தங்காய்
நார்த்தங்காய்

* நார்த்தங்காயில் நல்ல அளவு வைட்டமின் சி இருப்பது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

* நார்த்தையில் வேர், மலர், கனிகள் பயன்கொண்டவை. மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது . இதன் சாறு வாந்தியை நிறுத்தும். பசியை தூண்டி விடும். காய்ச்சலின் வெப்பம் மற்றும் தாகம் போக்கும்.

* நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப் பொருமல் நீங்கும்.

* தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும்.

* நார‌த்தை பழ‌த்‌தி‌ன் மே‌ல் தோலை தே‌ன் அ‌ல்லது ச‌ர்‌க்கரை‌ப் பா‌கி‌ல் ஊற வை‌த்து ந‌ன்கு ஊ‌றிய ‌பி‌ன் ‌சீத‌ பேதி உடையவ‌ர்களு‌க்கு கொடு‌க்க ந‌ல்ல பல‌ன் தரு‌ம்.

* நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும்.

நார்த்தங்காய் பயன்கள்
நார்த்தங்காய் பயன்கள்

* நார்த்தங்காய் சாறு உட்கொள்வது இதய நோய்கள், பெருந்தமனி தடிப்பு, பக்கவாதம் ஆகியவற்றின் அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

* கர்ப்பிணிகள் காலையும், மாலையும் நார்த்தம் பழச் சாறு எடுத்து தண்ணீர் கலந்து அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்திவந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும்.

* நார்த்தங்காயில் நல்ல அளவு வைட்டமின் சி இருப்பது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

* வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது.

* நார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும்.

* நோயின் தாக்கத்தினால் அவஸ்தைப்பட்டு விடுபட்டவர்களின் உடல்நிலை தேற, நார்த்தம் பழச்சாறு அருந்துவது மிகவும் நல்லது.

* நார‌த்த‌ங்காயை அ‌ல்லது பழ‌த்தை எ‌ந்த வடிவ‌த்‌திலாவது உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர ர‌த்த‌ம் சு‌த்தமடையு‌ம். வாத‌ம், கு‌ன்ம‌ம் (வ‌யி‌ற்று‌ப் பு‌ண்), வ‌யி‌ற்று‌ப் புழு இவை ‌நீ‌ங்கு‌ம். ப‌சியை அ‌திக‌ரி‌க்கு‌ம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com