கரப்பான் பூச்சி
கரப்பான் பூச்சி

கரப்பான் பூச்சிகளை விரட்ட சில வழிமுறைகள்!

கரப்பான் பூச்சிகளை விரட்ட சில வழி முறைகள்:

  • சோப்பு தண்ணீர் இருக்கும் இடங்களுக்கு கரப்பான் பூச்சிகள் வராது. எனவே கரப்பான் பூச்சி வரும் இடங்களில் சோப்புத் தண்ணீரைத் தெளித்தால், கரப்பான் பூச்சிகள் வராமல் இருப்பதுடன், வந்தால் இறந்து விடும்.

  • வெள்ளரிக்காயின் தோலை, ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு வைத்தால், அதிலிருந்து வெளிவரும் நாற்றத்தினால், கரப்பான் பூச்சிகள் வருவதை நிரந்தரமாக தடுக்கலாம்.

  • ஒரு பிளாஸ்டிக் மூடியில் சிறிய பௌலில் சிறிது பேக்கிங் சோடாவை போட்டு, அதனை கபினட்டில் வைத்து, மூடி விடவேண்டும். ஆனால் 10-15 நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். ஏனெனில் அதன் வாசனை போய்விடும். மேற்கூறியவாறெல்லாம் செய்து வந்தால், கரப்பான் பூச்சிகள் வராமல் தடுக்கலாம்.

கரப்பான் பூச்சி
கரப்பான் பூச்சி
  • கரப்பான் பூச்சியின் தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமெனில், ஒரு வாளி நீரில், 2 கப் அம்மோனியாவை சேர்த்து கலந்து, பாத்திரம் கழுவும் தொட்டியைக் கழுவினால், அம்மோனியாவின் வாசத்திற்கு கரப்பான் பூச்சிகள் நிரந்தரமாக வருவதை தவிர்க்கும்.

  • கரப்பான் பூச்சிகள் இருக்குமிடத்தில் வெள்ளைப்பூண்டை நசுக்கி சிறு, சிறு துண்டுகளாக்கி சிதறி இருக்கும்படி போட்டு வைத்தால் கரப்பான் பூச்சிகள் ஒழிந்து விடும்.

  • சமையலில் மணத்திற்காக பயன்படுத்தும் பிரியாணி இலையை பொடி செய்து, அதன் கரப்பான் பூச்சி வரும் இடங்களில் தூவினால், பிரியாணி இலையின் மணத்திற்கு கரப்பான் பூச்சிகள் வராமல் இருப்பதோடு, அதனை சாப்பிட்டால் கரப்பான் பூச்சி இறந்துவிடும்.

  • மிகச் சிறந்த கரப்பான் பூச்சி விரட்டி என்றால் அது மாவு தான். ஆம், எப்படியெனில் மாவு உருண்டையில் சிறிது போரிக் ஆசிட் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து, கரப்பான் பூச்சி வரும் இடத்தில் வைத்தால், கரப்பான் வருவதை தவிர்க்க முடியும்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com