தானமும் அதன் பலன்களும்!

தானமும் அதன் பலன்களும்!

தமக்கு மிஞ்சி தான் தானம் என்பது முதுமொழி. நமக்கு மிஞ்சியது போக மற்றவற்றை தேவைப்படுபவர்களுக்கு தானமாக தரச் சொல்லி பெரியோர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அத்தகைய தானங்கள் பல வகைப்படும். அன்னதானம் , கோதானம் (கன்றுடன் கூடிய பசு) மிகவும் சிறப்பான தானமாக சொல்லப்பட்டிருக்கிறது.

ஆடை தானம் - ஆயுள் விருத்தி

அரிசி தானம் -பாவங்கள் போக்கும் மஞ்சள் தானம் -மங்களம் உண்டாகும் எண்ணெய் தானம் கர்ம வினைகள் தீரும் ,கடன் தொல்லைகள் தீரும் குடை தானம் - தவறான வழியில் ஏதேனும் செல்வம் சேர்த்திருந்தால் அதனால் ஏற்பட்ட பாவங்கள் விலகும் தேன் தானம் - புத்திர பாக்கியம் ஏற்படும், இனிமையான குரல் (சாரீரம்) கிடைக்கும்.

தாகம் தீர்க்கும் தண்ணீரை தானம் செய்தால் - மன சாந்தி உண்டாகும் தயிர் சாதம் - ஆரோக்கியம், ஆயுளை நீடிக்கும்.

பூமிதானம் - இகபர சுகங்கள் அனைத்தும் கிடைக்கும்.

சொர்ண தானம் - கோடி புண்ணியம் பெருகும்.

வஸ்திர தானம் - ரோக நிவாரணம், நோய் நொடியின்றி வாழ முடியும் கோ தானம் - பித்ரு சாபம் அகலும்.

தில (எள்)தானம் - பாவ விமோசனம் தீம் தானம் - கண் பார்வை தீர்க்கமாகும்.

தேங்காய் தானம் - நினைத்த காரியம் அனைத்தும் கைகூடும்.

வெல்லம் - குலம் விருத்தி அடையும்.

இப்படி நம்மால் முடிந்ததை தேவைப்பட்டவர்களுக்கு தானமாக தர நம் மனதில் நிம்மதி சந்தோஷம் பெருகுவதுடன் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com