உச்சாணிக் கொம்பில் தங்கம் விலை! ரூ.2 லட்சமாக ஏறப்போகும் 10 கிராம் தங்கத்தின் விலை..!

இந்தாண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை 10-15% வரை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சர்வதேச ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
Gold
Gold
Published on

‘தங்கம்’ என்ற மஞ்சள் உலோகத்திற்கு எப்போதும் தனி மதிப்பு உண்டு. உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது தங்கத்தின் மீதான மோகம் இந்திய பெண்களுக்கு தான் அதிகம் என்பதை மறுக்க இயலாது. தங்கம் ஒரு அழகான, மதிப்புமிக்க உலோகம் மட்டுமின்றி அது அலங்கார ஆடம்பர பொருளாகவும், செல்வத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்தியா போன்ற நாடுகளில் தங்கம் ஒரு பாரம்பரிய முதலீடு மற்றும் சேமிப்பு முறையாகக் கருதப்படுவதால், அதன் தேவை எப்போதும் அதிகமாகவே உள்ளது.

தங்கத்தை அதன் விலை அதிகரித்தாலும் அதை வாங்கும் மோகம் இந்தியர்களிடையே குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமின்றி கடந்த 10 ஆண்டுகளில் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தான் தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக சர்வே கூறுகிறது.

இந்தியாவில் தங்கத்தின் மீதான அதீத மோகத்திற்கு என்ன தான் காரணம் என்று அலசினால், ஆசையும், கௌரவமும் என்ற இரண்டு விஷயங்கள் தான் நம் கண் முன் வந்து நிற்கிறது.

தங்கத்தை சிலர் அழகுக்காகவும், சிலர் திருமணத்திற்கு சேர்த்து வைப்பதற்காகவும், வேறு சிலர் வருங்கால சேமிப்பிற்கான சிறந்த முதலீடாகக் கருதியும் வாங்குகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
‘வந்தாச்சு 9 காரட் தங்கம்’...பெண்களுக்கு இனி கொண்டாட்டம் தான்...விலை எவ்வளவு தெரியுமா?
Gold

இந்தியாவில் சமீப காலங்களில் தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சங்களை எட்டியுள்ளது. அதுமட்டுமின்றி தங்கம் விலை இனிமேல் குறையாது ஏறிக்கொண்டே தான் இருக்கும் என்ற காரணத்தால் தற்போது பலரும் தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்து விட்டனர். தங்கத்தின் வரலாறு காணாத விலையேற்றத்திற்கு உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை, பணவீக்கம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், போர், அரசியல் பதட்டங்கள் போன்றை முக்கிய காரணங்களாக பார்க்கப்படுவதால் இதனால் பாதுகாப்பான புகலிடமாக தங்கம் பார்க்கப்படுகிறது.

அதனால், உலகப் பொருளாதாரம் நிலையற்றதாக இருக்கும்போது, ​​முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாகக் கருதுவதால், தங்கத்தின் தேவை அதிகரித்து, விலையும் உயர்கிறது. அதேபோல் உலக சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப இந்தியாவிலும் தங்கத்தின் விலை மாறுபட்டுக்கொண்டே இருக்கிறது.

இந்தியாவில் 2005-ம் ஆண்டு (24 காரட்) 10 கிராம் 7,638 ரூபாயாக இருந்த தங்கத்தில் விலை, அதுவே 2015-ம் ஆண்டு (24 காரட்) 10 கிராம் தங்கத்தில் விலை 24,931 ரூபாயாக உயர்ந்தது. அதுவே இந்த ஆண்டு (2025) ஆகஸ்ட் மாதத்தில் (24 காரட்) 10 கிராம் தங்கத்தில் விலை 1,04,320 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 79,389 ரூபாயும், கடந்த 20 ஆண்டுகளில் 96,682 ரூபாயும் அதிகரித்துள்ளது.

இதே நிலை நீடித்துக்கொண்டே சென்றால் இன்னும் 5 ஆண்டுகளில் தற்போது இருக்கும் விலையை விட இரண்டு மடங்காக அதிகரிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். அப்படி பார்த்தால் 10 கிராம் தங்கத்தின் விலை அடுத்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒவ்வொரு வருடமும் ஏறும் விலையில் அடிப்படையில் கணக்கிடப்பட்ட ஒரு கணிப்புதானே தவிர சர்வதேச சூழல்களுக்கு ஏற்ப தங்கத்தின் விலையும் நிச்சயம் மாற்றம் ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது. எதுஎப்படி இருந்தாலும் உலக அளவில் ஏற்படக்கூடிய அரசியல் பதற்றங்கள், வர்த்தக மோதல்கள், போர் பதற்றம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஆகிய அனைத்துமே தங்கத்தின் விலையை உயர்த்தும் காரணிகளாக பார்க்கப்படுவதால் அடுத்த 5 ஆண்டுகளில் இவை அனைத்தும் உலக நாடுகளிடையே நிகழாமல் இருக்க சாத்தியமில்லை. இந்தாண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை 10-15% வரை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சர்வதேச ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அதிலும் தங்கம் விலை எவ்வளவு அதிகரித்தாலும் அதை வாங்குவதற்கு இந்திய மக்கள் தயாராக இருப்பதால் இப்போதே உங்களால் முடிந்த அளவு தங்கத்தில் முதலீடு செய்வது எதிர்காலத்திற்கு(நீண்ட கால தேவைக்கு) நல்லது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

இதையும் படியுங்கள்:
தங்க ETF vs டிஜிட்டல் தங்கம்... எது சிறந்தது?
Gold

தங்கத்தை நகையாக வாங்குதற்கு (ஜிஎஸ்டி+சேதாரம் சேர்த்தால் விலை அதிகம் என்பதால்) தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என்று நினைப்பவர்கள் தங்கம் சம்பந்தப்பட்ட ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்தும் பயனடையலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com