1000 கிலோ தங்க புதையல்… பெரிய பணக்கார நாடாக மாறும் சீனா!

Gold mine
Gold mine
Published on

சீனாவில் 1000 கிலோ தங்க புதையல் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகளில் பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒன்றுதான் தங்க ஆராய்ச்சி ஆகும். இந்த ஆராய்ச்சியில்தான் ஒரு பெரிய கண்டுபிடிப்பு நடந்துள்ளது. ஆம்! சீனாவில் தான் இந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது. சீனா சமீபக்காலமாக பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறது. வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் சீனாவும் ஒன்று. அதுவும் சீனா மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது.

அறிவியல் தொழில்நுட்ப ரீதியாக பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகிறது. பல நிறுவனங்களும் சீனாவில் பெரும் அளவில் வளர்ச்சி பெற்று வருகிறது.

அந்தவகையில் சீனாவில் பல ஆண்டுகளாக தங்க இருப்பு குறித்தான ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. மத்திய மற்றும் வடகிழக்கு சீனாவில் இரண்டு தங்கச் சுரங்கப் புதையல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு சுரங்கங்களிலும் சேர்ந்து கிட்டத்தட்ட 1000 டன் தங்கம் இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஒருவேளை இந்த சுரங்கங்கள் மட்டும் இருப்பது உறுதி செய்யப்பட்டால், உலகின் மிகப்பெரிய பணக்கார நாடாக சீனா விளங்கும். அமெரிக்காவை விட பெரிய நாடாக இருக்கும்.

இதற்கு முன்னதாக தென் அமெரிக்காவில் உள்ள தங்கச் சுரங்கம் உலகின் மிகப்பெரியதாக இருந்து வந்தது. சீனாவில் 1000 டன் தங்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டால், அதன் சந்தை மதிப்பு சுமார் 83 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என கணிக்கப்படுகிறது.  

இதை உறுதிசெய்ய, , 3D புவியியல் கண்காணிப்பு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த சுரங்கம் சுமார் 3000 மீட்டர் நீளமாகவும், 2500 மீட்டர் அகலமாகவும் இருக்கிறது.

இதுகுறித்து உலக தங்கக் கழகம் கூறியபோது, “ சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கச் சுரங்கம் மகிழ்ச்சி தரும் அளவிலானது. ஆனால், இதன் உண்மைத் தன்மை இன்னும் உறுதி செய்யப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் சீனா, இந்த தங்கச் சுரங்கம் இருப்பது மட்டும் உறுதியானால், பொருளாதார ஆதிக்கத்தையும் பெறக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஸ்டார் அனீஸுக்குத் தரலாமா '10 ஸ்டார்' ஸ்டேட்டஸ்?
Gold mine

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com