ஸ்டார் அனீஸுக்கு (Star Anise) நம் சமையலறையில் ஒரு முக்கியமான இடம் உண்டு. பிரியாணி மற்றும் குருமா போன்ற உணவுகளில் வாசனைக்காகவும் சுவைக்காகவும் இது சேர்க்கப்படுகிறது. மேலும் இது நம் உடலின் மொத்த ஆரோக்கியத்தையும் இயற்கை முறையில் காக்க உதவும் ஓர் அற்புதமான மூலிகைப் பொருள். 'ஸ்டார் அனீஸ்' வாட்டரில் ஆரோக்கியத்திற்கு தேவையான சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் ஊட்டச் சத்துக்களும் அதிகம் நிறைந்துள்ளன. ஸ்டார் அனீஸ் தரும் 10 வகையான ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
*ஸ்டார் 1. அமைதிப்படுத்தும் குணம்
ஸ்டார் அனீஸ் வாட்டர் மன அழுத்தத்தை குறைத்து இரவில் நல்ல தரமான தூக்கம் பெற உதவும்.
*ஸ்டார் 2. ஸ்டார் அனீஸில் இரைப்பை குடல் இயக்கங்கள் சிறப்பாக நடைபெற உதவும் கூட்டுப்பொருள்கள் உள்ளன. இவை ஜீரணத்துக்கு உதவும் ஜூஸ்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். மேலும் வயிற்றிலுள்ள வீக்கங்களைப் போக்கவும் அஜீரணத்தை குறைக்கவும் உதவி புரியும்.
*ஸ்டார் 3. ஸ்டார் அனீஸின் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணமானது தொண்டை அழற்சியை போக்க உதவும். இருமல் சளி உண்டாகும் அறிகுறிகளைக் களைந்து தொண்டை இதம் பெறவும் உதவும்.
*ஸ்டார் 4. இதிலுள்ள பிளவனாய்ட்ஸ் மற்றும் பாலிபினால்ஸ் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், நோய்த் தாக்குதலுக்குக் காரணமாகும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை எதிர்த்துப் போராடி உடலைப் பாதுகாக்கும். உடல் முதிர்ச்சியுற்ற தோற்றம் பெறுவதை தள்ளிப் போடவும் செய்யும். உடலில் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கவும் ஸ்டார் அனீஸ் உதவி புரியும்.
*ஸ்டார் 5. ஸ்டார் அனீஸ் மெட்டபாலிச ரேட்டை அதிகரிக்க உதவும். உடலுக்குள் நீர் தேங்குவதை குறையச் செய்து எடைக் குறைப்பிற்கும் உதவி புரியும்.
*ஸ்டார் 6. செல் சிதைவுறுவதைத் தடுத்து கேன்சர் வரும் அபாயத்தைத் தடுக்க வல்லது ஸ்டார் அனீஸ்.
*ஸ்டார் 7. இதன் இயற்கையான அனால்ஜெசிக் குணமானது தசைகளை தளர்வுறச் செய்து மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் தசைப் பிடிப்பு நீங்க உதவும்.
*ஸ்டார் 8. ஸ்டார் அனீஸில் உள்ள ஆன்டி பாக்ட்டீரியல் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்கள் சருமத்தில் வளரும் தொற்று நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடி சருமம் ஆரோக்கியமும் பளிச்சென்ற காம்ப்ளெக்க்ஷன் பெறவும் உதவும்.
*ஸ்டார் 9. ஸ்டார் அனீஸின் ஆன்டி பாக்ட்டீரியல் மற்றும் ஆன்டி ஃபங்கல் குணங்கள், கேன்டிடா (Candida) உள்ளிட்ட தீங்கு தரும் பூஞ்சைகளை (Fungi) எதிர்த்துப் போராடி அழிக்க உதவுகின்றன.
*ஸ்டார் 10. ஸ்டார் அனீஸில் உள்ள ஒரு கூட்டுப் பொருள் இன்சுலின் சென்சிடிவிட்டியை அதிகரிக்கவும் இரத்த சர்க்கரை அளவை சம நிலையில் வைத்துப் பராமரிக்கவும் உதவும்.