

பேரறிஞர் அண்ணாவின் 118ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் முதலமைச்சர் விஜய் அண்ணாவிற்கு புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியர் பேரறிஞர் அண்ணா என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் தொலைநோக்கு பார்வையும், மக்கள் சேவையையும் நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றுகிறேன். எழுச்சியூட்டும் மேடை பேச்சாலும், கூர்மையான எழுத்தாற்றலாலும் மக்கள் மனங்களை கவர்ந்தவர் அண்ணா என்று முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.
இதற்கிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுவதாகவும் முப்பெரும் விழாவுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முப்பெரும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம்.
திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாள்கள், திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளை இணைத்து முப்பெரும் விழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், 2026ஆம் ஆண்டுக்கான திமுக முப்பெரும் விழா இன்று (செப்.15) மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுவதாகவும் முப்பெரும் விழாவுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவிலும் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை.
அதுகுறித்து துரைமுருகன் கூறுகையில், மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் அண்ணா சிலைக்கு மாலை போடவில்லை என தெரிவித்தார்.