திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 13.5 கோடி லட்டுகள் விற்று புது சாதனை..!

திருப்பதி லட்டு
திருப்பதி லட்டு
Published on

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு விற்பனையில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் உலகப் புகழ்பெற்றதாகும். திருப்பதியில் சாமி தரிசனம் செய்யும் ஒவ்வொரு பக்தருக்கும் தலா ஒரு லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்படுகிறது. இது தவிர கூடுதல் லட்டு பிரசாதமாக ஒரு லட்டு ரூ.50 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. திருப்பதியில் லட்டு பிரசாதமாக வழங்கப்படும் நடைமுறை ஏறக்குறைய 310 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.

பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தரத்துடன் சுவையாக உள்ளதால் பக்தர்கள் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் 2025-ம் ஆண்டு லட்டு பிரசாத விற்பனையில் புது சாதனை படைத்துள்ளது.

இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாத விற்பனையில் புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

2024-ம் ஆண்டு 12,15,00,000 விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே 2025-ம் ஆண்டு 13,52,00,000 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, 2025-ம் ஆண்டு 1 கோடியே 37 லட்சம் லட்டுகள் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது, கடந்த 2024-ம் ஆண்டை விட 10 சதவீதம் அதிகமாகும்.

2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந்தேதி அன்று கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரே நாளில் 5 லட்சத்து 13 ஆயிரம் லட்டுகள் விற்பனையாகி புதிய சாதனையை படைத்தது.

சமீபகாலமாக லட்டு பிரசாதத்தின் தரம் மற்றும் ருசி அதிகரித்துள்ளதாக, பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2025-ம் ஆண்டு லட்டு பிரசாத விற்பனையில் மறக்க முடியாத சாதனை ஆண்டாக அமைந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
திருப்பதி தேவஸ்தானம்: அடுத்த ஊழல் அம்பலம்...! பட்டு அங்கவஸ்திரத்திற்க்குப் பதில் பாலிஸ்டர்..!
திருப்பதி லட்டு

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com