நாகை அருகே 14 இலங்கை மீனவர்கள் கைது!

Nagapattinam
Nagapattinam

நாகை கோடியக்கரை அருகே 14 இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 14 பேரை தேவாரண்யம் கடலோர காவல் குழும காவல்துறையினரிடம் ஒப்படைக்கவுள்ளனர்.

தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடித்தார்கள் என்று கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து, அவர்களின் படகையும் மீன்பிடி வலைகளையும் பறிமுதல் செய்வது வழக்கம். இது அடிக்கடி நடக்கும் சம்பவம் என்பதால், இதற்கு ஒரு நிரந்தர தீர்வை கொண்டு வர வேண்டுமென்று தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்கிறார்கள் என்று இந்திய கடற்படையினர் கைது செய்வதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

இந்தநிலையில்தான், 5 படகில் எல்லை தாண்டி வந்த 14 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்தவுடன் அவர்களை நாகை துறைமுகத்துக்கு அழைத்து வந்துள்ளனர். கைதான 14 பேரும் வேதாரண்யம் கடலோர காவல் குழும காவல்துறையினரிடம் ஒப்படைக்க இருக்கிறார்கள். அவர்கள் விசாரணை நடத்திய பிறகே அவர்களை கைது செய்வதா? வழக்குப்பதிவு செய்வதா? அல்லது காவலில் வைப்பதா? என்பன போன்ற விவரங்கள் தெரியவரும்.

இதையும் படியுங்கள்:
10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளை நேரில் சந்திக்கிறாரா விஜய்?
Nagapattinam

அந்த விசாரணையில் அவர்கள் மீனவர்கள் தானா என்றும்? இல்லை அகதிகளாக இந்தியா வந்து இருக்கிறார்களா? என்றும் அல்லது திசை மாறி இந்திய எல்லைக்குள் வந்துவிட்டார்களா? என்பது முதல் கட்ட விசாரணைக்கு பிறகே தெரியும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். அந்த படகுகளில் ஆயுதம் அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் உள்ளனவா? என்றும் சோதனை செய்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com