ஸ்பெயினில் ஏற்பட்ட வெள்ளத்தால் 160 பேர் பலி!

Spain Flood
Spain Flood
Published on

ஸ்பெயின் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள வாலென்சியாவில் வெள்ளத்தில் சிக்கி ஏறதாழ 160 பேர் பலியாகிவுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயினில் வரலாறு காணாத அளவு மழை பெய்து வருகிறது. புதன் மற்றும் வியாழக்கிழமை அன்று மிக அதிக கன மழை பெய்திருக்கிறது. அதாவது ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை வெறும் 8 மணி நேரத்திலேயே பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதுவும் சாலைகளில் ஓடிய வெள்ளத்தைப் பார்த்தால் சுனாமி பேரலைகளைப் போல இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தார்கள்.

அதேபோல் விளைவுகளும் சுனாமி வந்தால் என்ன விளைவு ஏற்படுமோ அந்த அளவிற்கு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதைப் பார்க்கும்போதெல்லாம் சுனாமியால் ஏற்பட்ட விளைவை நினைவுக்கூறுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். வலென்சியா பகுதி முழுவதும் குப்பையால் நிரம்பியுள்ளதாம். வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட வாகனங்கள் மற்றும் நீரில் மூழ்கிய கட்டடங்கள் ஆகியவற்றில் உடல்கள் இருக்கிறதா என்று அவசரக்கால குழுவினர் தேடி வருகின்றனர். ஏனெனில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்களுக்குள் உடல்கள் உள்ளன. மீட்பு குழுவினர் ஏற்கனவே வீட்டின் மேற் கூரைகள் மற்றும் வாகனங்களில் சிக்கித் தவித்த சுமார் 70 பேரைக் காப்பாற்றியுள்ளனர். 1000க்கும் மேற்பட்டோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பேரழிவை தொடர்ந்து ஸ்பெயினில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், அறிவித்துள்ளார்.

கனமழையோடு பலத்த சூறாவளி காற்று மற்றும் ஆலங்கட்டி மழையும் பெய்துள்ளதால் பாதிப்பு அதிகமாக உள்ளது. மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
கின்னஸ் சாதனை! அயோத்தி ராமர் கோவிலில் கொண்டாடப்பட்ட தீபாவளி!
Spain Flood

இந்த வெள்ளத்தால் ஏராளமான கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளதால், ஆங்காங்கே கான்க்ரீட் குவியல்கள் இருக்கிறதாம். இறந்துப் போனவர்களின் உடல்களை கூட வைக்க இடங்கள் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். ஆகையால், நீதிமன்ற வளாகத்தை தற்காலிக பிணவறையாக்கியுள்ளனர்.

வாலென்சியாவில் உள்ள 12-க்கும் மேற்பட்ட நகரங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com