மியான்மரில் இயற்கையின் கோரதாண்டவம் - பாபா வங்கா கணித்தது பலித்ததா?

உலகையை பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய மியான்மர் நிலநடுக்கத்தை பார்க்கும் போது பாபா வங்காவின் கணிப்பு உண்மையாகி விட்டதோ என எண்ணத்தோன்றுகிறது.
Myanmar earthquake and baba vanga
Myanmar earthquake and baba vanga
Published on

உலகையே உலுக்கி போட்டிருக்கிறது மியான்மர் நிலநடுக்கம். சில நொடிகளில் எல்லாம் முடிந்து விட்டது. அடுத்தடுத்து தாக்கிய நிலநடுக்கங்களால் மியான்மரில் பல நகரங்களில் வானுயர கட்டிடங்கள் சீட்டு கட்டுப்போல் சரிந்து, தரைமட்டமாகின. கோபுரங்கள், வீடுகள், பாலங்கள் அப்படியே விழுந்தன. வாகனங்கள் அணிவகுத்த அழகான ரோடுகள் துண்டு துண்டாக பிளந்தன. 2000க்கும் அதிகமான வீடுகள் துண்டு துண்டுகளாக பிளந்து கிடக்கின்றன. பலஆண்டுகளாக கம்பீரமாக தாக்குபிடித்த பாலங்கள் கூட நொடிப்பொழுதில் தடம் தெரியாமல் போனது. எங்கு பார்த்தாலும் கட்டிட குவியல்களாக காட்சியளிக்கின்றன.

இடிந்து விழுந்த கட்டிடங்கள் பலநூறு உயிர்களை அப்படியே உள்ளுக்குள் அமுக்கியது. பல்வேறு கனவுகளுடன் இருந்த அப்பாவி மக்கள் சில விநாடிகளில் சிக்கி உயிருடன் இடிபாடுகளுக்குள் சமாதியாகினர். கொத்து கொத்தாக மரணம், எங்கும் மரண ஓலங்கள், பயத்தில் அங்கும் இங்குமாக ஓடும் மக்கள், கட்டிட இடிபாடுகளுக்குள் சொந்தங்களை தேடி அலையும் உறவுகள் என அங்கு காண்பவை எல்லாம் நெஞ்சை நெறுக்கும் காட்சிகள்.

முதலில் பலியானது 100 பேர் என்றார்கள், பின்னர் 200, அடுத்து 400, 600, 1000 என்று இப்போது 1650ஐ (மியான்மரில் மட்டும்) தாண்டி விட்டது என்ற தகவல் நடுக்க வைக்கிறது. அதுமட்டுமா 3,408 பேர் படுகாயமடைந்துள்ளனர், 3,400-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்கிறது அரசாங்கம், இதனால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமோ என்ற அச்சம் எழுகிறது.

உலகை உலுக்கிய மியான்மர் மரண ஓலம் இன்னும் நின்றபாடில்லை. உயிரிழப்புகள் 10 ஆயிரத்தை எட்டும் என்று சர்வதேச ஆய்வாளர்கள் கணித்து உள்ளனர்.

கடைசி இரண்டாண்டுகளில் உலகம் பார்த்திராத கொடிய நிலநடுக்கம் இது. இந்த பயங்கர நிலநடுக்கம் தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கடந்த 28-ம்தேதி 7.7 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்டது. இதனிடையே மியான்மரை புரட்டிப்போட்ட இந்த பயங்கர நிலநடுக்கம் அதன் அண்டை நாடுகளில் ஒன்றான தாய்லாந்திலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கமானது மியான்மரை மட்டும் உருகுலைத்து விடவில்லை உலகத்திற்கே ஒரு எச்சரிக்கை மணி அடிச்சிருக்குனு சொல்லலாம்.

உலகையை பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த நிலநடுக்கத்தை பார்க்கும் போது பாபா வங்காவின் கணிப்பு உண்மையாகி விட்டதோ என எண்ணத்தோன்றுகிறது. ஏனென்றால், ஆண்டுதோறும் உலகில் நடக்கும் நிகழ்வுகளை பாபா வங்கா முன்னரே கணித்துள்ளார்.

உலகில் உள்ள பல தீர்க்கதரிசிகளில் ஒருவரான பாபா வங்காவின் கணிப்புகள் மிகவும் பிரபலமானவை. அவர் இறப்பதற்கு முன்பு, ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் நிகழ்வுகளை கணித்து, அவற்றை குறிப்புகளாக எழுதி வைத்துள்ளார். இதுவரை அவருடைய பல கணிப்புகள் நடத்துள்ளது.

ஒட்டுமொத்த உலகத்துக்கே ஜாதகம் எழுதி வைத்து விட்டு சென்ற பாபா வங்கா தற்போது நடந்த இந்த நிலநடுக்கத்தையும் கணித்திருக்கிறார். இந்த வகையில் 2025-ல் என்ன நடக்கும் என அவர் கணித்தவற்றில் ஒன்று தான் நிலநடுக்கம். 2025-ல் உலகில் பல பகுதிகளில் நிலநடுக்கமும், வெள்ளமும் ஏற்படும் என கணித்திருந்திருக்கிறார். இன்னும் உலகின் பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படும் என்கிறார் அந்த தீர்க்கதரிசி. அதுமட்டுமின்றி 2025-ம் ஆண்டு உலக அழிவு தொடங்கும் என்றும், பெரிய மோதல்கள், சோகமான சம்பவங்கள் நடைபெறும் என்று பாபா வங்கா கணித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
பாபா வங்காவின் 2025 பற்றிய அதிர்ச்சி தரும் கணிப்புகள்!
Myanmar earthquake and baba vanga

அவர் கணித்தது போன்றே மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கிறார்கள். ஆண்டு தொடங்கி மூன்று மாதங்களே ஆனநிலையில் இந்த நிலநடுக்கம் உலக மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் ரஷ்யா போர், இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர், மியான்மர் உள்நாட்டு கலவரம் என பல உலக நாடுகளில் போர் பதற்றம், வன்முறைகள் நடந்தேறி வரும் நிலையில் அடுத்தடுத்து பாபா வங்காவின் கணிப்புகள் ஒவ்வென்றாக நடந்தேறி வருகிறது. இதனால் இந்தாண்டு இந்த தீர்க்கதரிசியின் கணிப்புப்படி பல அதிர்ச்சி சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நடந்து விடுமோ என்ற அச்சம் மக்களிடையே நிலவுகிறது.

அதுமட்டுமின்றி அவரது தீர்க்க தரிசனப்படி அடுத்த 3000 ஆண்டுகளில் இந்த பூமியை என்ன செய்ய காத்திருக்கிறது இயற்கை? என்பதை ஆண்டு வாரியாக எழுதி வைத்துள்ளார். தனது இறப்பு தேதி ஆகஸ்ட் 11, 1996-ல் நடக்கும் என அவர் கணித்ததுபடியே நடந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
மியான்மர், தாய்லாந்தில் பயங்கர நிலநடுக்கம்… 107 பேர் பலி!
Myanmar earthquake and baba vanga

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com